குமராட்சி அருகே இந்தியன் கேஸ் கிடங்கில் DACஎண் பெற்றுக்கொண்டு சிலிண்டர் தராமல் ஏமாற்றம்..? நுகர்வோர் புகார்.. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 19 June 2026

குமராட்சி அருகே இந்தியன் கேஸ் கிடங்கில் DACஎண் பெற்றுக்கொண்டு சிலிண்டர் தராமல் ஏமாற்றம்..? நுகர்வோர் புகார்..

 


குமராட்சி அருகே தவர்த்தாம்பட்டு பகுதியைச் சேர்ந்த P. இந்துமதி நுகர்வோர் எண் 7065402537 என்ற பெண்மணி, 'கமலா இந்தியன் கேஸ் ஏஜென்சி' மூலமாக கடந்த மே 18 அன்று வீட்டு உபயோக சிலிண்டர் முன்பதிவு செய்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, மே 24 அன்று கீழக்கரை கேஸ் கிடங்கில் இருந்து வந்த டெலிவரி ஊழியர்கள், சிலிண்டரை டெலிவரி செய்ய வந்திருப்பதாகக் கூறி நுகர்வோரின் கைபேசிக்கு வந்த DAC எண்: 501064-ஐப் பெற்றுக்கொண்டுள்ளனர். ஆனால், அதன் பிறகு சிலிண்டர் வழங்கவில்லை சிலிண்டரை கிடங்கில் பெற்று கொள்ளவும் கூறி உள்ளார் அதன் பிறகு கிடங்கில் கேட்டதற்கு உங்களுக்கு டெலிவரி ஊழியர் எடுத்து வருவார் கூறினார் விநியோகம் செய்யாமல், இப்படி மாற்றி மாற்றி பதில் கூறி உள்ளனர் அதன் பிறகு சிலிண்டர் வழங்காத நிலையில் அலுவலகத்தில் நேரில் சென்று கேட்டதற்கு நீங்கள் மீண்டும் புக் செய்ய வேண்டும் கூறி உள்ளனர் இதனால் மனம் உடைந்த இந்துமதி சிலிண்டர் வாங்காமல் ஏமாற்றம் அடைந்தார் அதன் பிறகு ஆன்லைன் மூலம் இணையத்தில் இந்தியன்IOCL நிறுவனத்தில் மின்னஞ்சல் மூலம் புகார் தெரிவித்துள்ளார்.


அத்தியாவசியத் தேவையான வீட்டு உபயோக சிலிண்டர் கிடைக்காமல் தவித்து வருவதாகத் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.கள்ளச்சந்தை முறைகேடு பின்னணி மத்திய அரசு மற்றும் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், சிலிண்டர் விநியோகத்தில் முறைகேடுகளைத் தடுக்கவே பாதுகாப்பான 'DAC' ஒருமுறை பயன்படுத்தும் கடவுச்சொல் முறையைக் கொண்டு வந்தன. ஆனால், கீழக்கரை கிடங்கு ஊழியர்கள் அப்பாவி நுகர்வோரின் நம்பிக்கையைப் பயன்படுத்தி இந்த எண்ணை வாங்கியுள்ளனர்.

வீட்டு உபயோக சிலிண்டர்களை வணிகப் பயன்பாட்டிற்கோ அல்லது கள்ளச்சந்தையிலோ கூடுதல் விலைக்கு விற்றுப் பெரும் லாபம் ஈட்டி வருவதாக உள்ளூர் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

No comments:

Post a Comment

*/