சேமிப்புக்கிடங்கில் உள்ளநெல் மூட்டைகள் எப்போது அரிசி ஆலைக்கு கொண்டு செல்லப்படும்? - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 20 May 2026

சேமிப்புக்கிடங்கில் உள்ளநெல் மூட்டைகள் எப்போது அரிசி ஆலைக்கு கொண்டு செல்லப்படும்?

 


கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே கீரப்பாளையத்தில் அரசு தற்காலிக திறந்தவெளி நெல்சேமிப்பு கிடங்கு அமைக்கப்பட்டுள்ளது. இங்கு லட்சக்கணக்கான நெல்மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டு தார்ப்பாய்க்கொணடு மூடிவைக்கப்பட்டு பாதுகாக்ப்பட்டு வருகின்றன. இந்த நெல் மூட்டைகள் நீண்ட நாட்களாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளதால் நெல் மூட்டைகள் அதிக வெயில், மழைக்காரணமாகசேதம் ஏற்பட வாய்ப்புஉள்ளது. அப்படி நெல்மணிகள் சேதமானால் அதனைஅரிசியாக்கும்போது அரிசி பழுப்பு கலரிலும் துர்நாற்றத்துடனும் இருப்பதற்கு வாய்ப்புண்டு. விரைவாக இந்த நெல் மூட்டைகளை அரசு அரிசி ஆலைகளுக்கு எடுத்துச்செல்லவேண்டும். ஏனெனில் இன்னும் சில மாதத்தில் குறுவை அறுவடைப்பணிகள் ஆரம்பித்ததால் அதில் கொள்முதல் செய்யப்படும் நெல்லை சேமிப்பதிலும் பெரிய பாதிப்பு மற்றும் இடம் பற்றாக்குறைவு ஏற்படும் என கூறும் விவசாயிகள் தற்போது இங்கு அடுக்கி வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகளை அரிசி ஆலைகளுக்கு எடுத்துச்சென்று அரிசியாக மாற்றி உணவு தானியக்கிடங்கில் பாதுகாக்கவேண்டும். அப்போதுதான் மக்களுக்கு தரமான அரிசி கிடைப்பதை உறுதி செய்யமுடியும். 

இல்லை எனில் நொடிக்கு நொடி இந்த நெல் மணிகள் பயன்படுத்த முடியாத நிலைக்கே செல்லும் எனவும் விவசாயிகள் குறிப்பிட்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment

*/