கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 35 ஆவது ஆண்டு நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது. சேத்தியாத்தோப்பு கும்பகோணம் சாலையில் உள்ள ராஜீவ் காந்தி திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் ராஜீவ் காந்தி பஞ்சாயத்து ராஜ்ஜியம் மாவட்டத் துணைத் தலைவர் கானூர் ஹரி கிருஷ்ணன், காங்கிரஸ்பஞ்சாயத்து ராஜ்யம் நகரத் தலைவர் முத்து. சீனிவாசன், ஐ என் டி யு சி காங்கிரஸ் தொழிற்சங்க மாநிலப் பொதுச் செயலாளர் வடப்பாக்கம் செல்வராஜ், காங்கிரஸ் மாவட்ட துணைத் தலைவர் புகழேந்தி, கோதண்ட விளாகம் கிராம காங்கிரஸ் கமிட்டித் தலைவர் வணங்காமுடி மற்றும் பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

No comments:
Post a Comment