நெய்வேலி மந்தாரக்குப்பம் மருந்து வணிகர்கள் சங்கத்தினர் நெய்வேலி ரயில் நிலையத்தில் ஆர்ப்பாட்டம் கடை அடைப்பு காரணமாக மொத்தமாக முடங்கிய மருந்து வணிகம்.. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 20 May 2026

நெய்வேலி மந்தாரக்குப்பம் மருந்து வணிகர்கள் சங்கத்தினர் நெய்வேலி ரயில் நிலையத்தில் ஆர்ப்பாட்டம் கடை அடைப்பு காரணமாக மொத்தமாக முடங்கிய மருந்து வணிகம்..

 


கடலூர் மாவட்டம், நெய்வேலி மந்தாரக்குப்பம் மருந்து வணிகர்கள் நெய்வேலி ரயில் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் மற்றும் கடை அடைப்பு செய்தனர் மொத்தமாக மருந்து வணிகம் முடங்கி உள்ளதால் மருத்துவ பயனாளிகள் கடும்  பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.


அகில இந்திய மருந்து வணிகர்கள் சங்க கடை அடைப்புக்கு ஆதரவாக 110க்கும் மேற்பட்ட மொத்த மற்றும் சில்லறை மருந்து கடைகள் அடைப்பில் ஈடுபட்டுள்ளனர்.சங்கத்தின் மாநில பொருளாளர் கடலூர் மாவட்ட முன்னாள் செயலாளர் குருமூர்த்தி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்நெய்வேலி மருந்து வணிகர் சங்க செயலாளர் பாபு முன்னிலை வகித்தார் குறிஞ்சிப்பாடி சங்க செயலாளர் நட்ராஜ் இந்திரா நகர் சங்க செயலாளர் ஐயப்பன் நெய்வேலி டவுன்ஷிப் சங்க செயலாளர் சிவா டாக்டர் நமச்சிவாயம் வடலூர் சையத் துரைக்கண்ணு சாம்பசிவம் ரவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


ஆன்லைன் மருந்து விற்பனையை நிறுத்த வேண்டும்,போலி மருந்துகளை தடுக்க வேண்டும் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை உள்ளடக்கி ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.இதன் காரணமாக நெய்வேலி மந்தாரக்குப்பம் நெய்வேலி டவுன்ஷிப் பகுதியில் அமைந்துள்ள 110 க்கும் மேற்பட்ட மொத்த மருந்து கடைகள் அடைக்கப்பட்டதால் அப்பகுதி வெறிச்சோடி காணப்படுகிறது.

No comments:

Post a Comment

*/