கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள காட்டுமன்னார்கோவில் வட்டம், நந்திமங்கலம் கிராமம் இங்குள்ள ஸ்ரீ நல்லம்மா காளியம்மன் ஆலயத்தில், ஆண்டுதோறும் தமிழ் வைகாசி மாதம் ஆங்கிலத்தில் மே மாதம் குறவஞ்சி என்கிற வினோத திருவிழா பாரம்பரியமாக நடைபெற்று வருகிறது.
மக்களின் வருகை இந்த விழாவைக் காண்பதற்காக சுற்றியுள்ள வட்டாரக் கிராமங்களிலிருந்து 1000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்டு வந்து விழாவைக் காண்பார்கள்.தற்போதைய சிக்கல் முன்பு இப்பகுதி வயல்வெளியாக இருந்தது. ஆனால், தற்போது இப்பகுதியில் சிதம்பரம் திருச்சி நான்கு வழி சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, இந்தச் சாலையில் தற்போது வாகனப் போக்குவரத்து மிகவும் அதிகமாகக் காணப்படுகிறது
திருவிழா நேரத்தில் பொதுமக்கள் அதிகம் கூடுவதால் விபத்து நடக்க அபாயம் உள்ளது எனவே பொதுமக்கள் ஆர்வலர்களின் கோரிக்கை திருவிழா நடைபெறும் நேரத்தில் வாகனங்கள் அதிகமாகச் செல்வதால், பொதுமக்கள் திருவிழாவை எவ்வித இடையூறுமின்றி கண்டு களிக்க ஏதுவாக, சுமார் மூன்று மணி நேரம் போக்குவரத்தை மாற்றம் செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
அதன்படி, வாகனப் போக்குவரத்தை சிவாயத்திலிருந்து மாற்றி, கோப்பாடி வழியாக திருப்பி விட வேண்டும் என்றும், அடுத்த ஆண்டாவது மாவட்ட நிர்வாகம் இதனை நேரடி ஆய்வில் எடுத்துக்கொண்டு உரிய போக்குவரத்து மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்றும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:
Post a Comment