கடலூர் மாவட்டத்தில் குறவஞ்சி என்கிற வினோத திருவிழா.. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 19 May 2026

கடலூர் மாவட்டத்தில் குறவஞ்சி என்கிற வினோத திருவிழா..

 

கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் வட்டம், நந்திமங்கலம் கிராமத்தில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ நல்லம்மா காளியம்மன் திருக்கோவிலில் மூன்று, நான்கு தலைமுறைகளுக்கும் மேலாக இந்த வினோத குறவஞ்சி திருவிழா ஆண்டுதோறும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த விழாவின் முக்கிய சடங்குகள் மற்றும் நிகழ்வுகள் பின்வருமாறு


 இந்த விழாவில் பங்கேற்பவர்கள் குறவன், குறத்தி, போலீஸ், வெட்டியான் போன்ற வேடங்களை அணிகிறார்கள்.

 உடல் முழுவதும் கருப்பு மை பூசிக்கொண்டு, இடுப்பில் சலங்கை கட்டி, கையில் ஈட்டியுடன் இந்த வேடங்களை அணிந்து ஊர்வலமாக வருகிறார்கள்.

ஊர் எல்லையை மிதித்தல்

வேடமணிந்தவர்கள் ஊரின் நான்கு புற எல்லைகளையும் மிதித்து, குறத்தியுடன் ஆடிப்பாடி இந்த நிகழ்வை நடத்துகிறார்கள். இதைக் காண சுற்றியுள்ள ஏராளமான கிராம மக்கள் வருகை தருகின்றனர் அவர்கள் ஓடி வரும்போது அரை சிங்கே என்று ஒரு அலறல் சத்தம் இடுவதால், மக்கள் மத்தியில் ஒரு வித அச்சமும் பரவசமும் ஏற்படுகிறது


குழந்தை பாக்கியம் தரும் மாங்காய் சடங்கு:

 கடைசியாக கோவில் மணி அடித்தவுடன், அவர்கள் கோவிலுக்குள் சுற்றி வருகிறார்கள். அப்போது அவர்களுக்கு மாங்காய் கொடுக்கப்படுகிறது.

 அந்த மாங்காயைக் கடித்து அவர்கள் சாப்பிடுவார்கள். அந்த மாங்காய் துண்டை குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியர் வாங்கிச் சாப்பிட்டால், அவர்களுக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது இங்குள்ள மக்களின் பலத்த நம்பிக்கையாகும்.யாராவது வெள்ளை நிறச் சட்டை அணிந்து வந்தால், அவர்கள் மீது இந்த குறவஞ்சி வேடம் அணிந்தோர் தங்கள் மேல் கரியில் உள்ள மையினைப் பூசி விளையாடுவார்கள் விழாவின் இறுதியாக, தரையில் ஏழு வெள்ளைக் கோடுகள் இடப்படும். அந்த ஈட்டியைக் கொண்டு அக்கோடுகளைத் தாண்டிச் சென்று அவர்கள் பழைய கொள்ளிடம் ஆற்றம் கரைக்கு குளியலுக்குச் செல்வார்கள்.அதன் பிறகு, கூடி இருக்கும் பொது மக்கள் அனைவர் மீதும் மஞ்சள் நீர் தெளிக்கப்பட்டு இந்த நிகழ்வு இனிதே நிறைவடைகிறது.


திருவிழா காலம்:

 இந்தத் திருவிழாவானது ஆண்டுதோறும் தமிழ் மாதமான வைகாசி மாதத்தில் காப்பு கட்டப்பட்டு, 12 நாட்கள் தொடர்ந்து சிறப்பாக நடைபெறுகிறது.

No comments:

Post a Comment

*/