கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு கட்டுக்கரையை சேர்ந்தவர் இளவரசன்((38). இவர் வெளிநாட்டில் தங்கி வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி ஒரு பெண் பிள்ளை இருந்து வருகின்றது. இந்நிலையில் இளவரசன் வெளிநாட்டில் கஷ்டப்பட்டு தான் சம்பாதிக்கும் பணத்தை அப்படியே வீட்டிலுள்ள மனைவி மகேஸ்வரி(30) க்கு அனுப்பி வைப்பார். இந்நிலையில் நன்றாக போய்க்கொண்டிருந்த இவர்களது திருமணவாழ்வில் இளவரசன் வெளிநாட்டிலிருந்து வீட்டிற்கு வந்தபோது மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது.
மனைவிக்கு வேறு ஒருவரோடு தொடர்பு இருப்பதைக்கண்டு, கண்டித்து குடும்பம் நடத்த அழைத்தார்.
இளவரசன் இதுகுறித்து காவல் துறையில் புகாரளித்துள்ளார். காவல்துறையினர் மகேஸ்வரியிடம் விசாரணைசெய்தும் இது முடிவுக்கு வரவில்லை. இந்நிலையில் கடும் மன உளைச்சலிலும், வேதனை அடைந்த ,இளவரசன் தான் சம்பாதித்த் பணத்தை எடுத்துக்கொண்டு மனைவி மகேஸ்வரி வேறு ஒருவருடன் சென்றுவிட்டார். எனது சாவுக்கு காரணம் எனது மனைவி, எனது மனைவியிடம் பழகும் ஆண், மற்றும் இரண்டு பெண்கள் என நான்கு நபர்களை. குறிப்பிட்டு சுமார் ஏழுநிமிட வீடியோ வெளியிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் வேதனையையும் ஏற்படுத்தி வருகிறது. இறந்த இளவரசன் உடலைக்கைப்பற்றி சேத்தியாத்தோப்பு போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

No comments:
Post a Comment