கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள நந்திமங்கலம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற நல்லமா காளியம்மன் ஆலயம் அமைந்துள்ளது இக்கோவிலின் வருடாந்திர திருவிழா கடந்த சில நாட்களாக விமரிசையாக நடைபெற்று வருகிறது.
விழாவின் முக்கிய நிகழ்வான 11-ஆம் நாள் தேர்த்திருவிழா இன்று வெகுவிமரிசையாக நடைபெற்றது இதனை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும் செய்யப்பட்டிருந்தன.
இதனைத் தொடர்ந்து, அலங்கரிக்கப்பட்ட தேரில் நல்லமா காளியம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த கிராம பொதுமக்களும், திரளான பக்தர்களும் ஓம் சக்தி, பராசக்தி" என்ற பக்தி கோஷங்களுடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர் முக்கிய வீதிகளின் வழியாக வலம் வந்த தேரை தரிசித்து, அர்ச்சனை செய்து பக்தர்கள் அம்மனின் அருளைப் பெற்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கிராம முக்கியஸ்தர்களும், விழா குழுவினரும் செய்து இருந்தனர்.

No comments:
Post a Comment