பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத நெடுஞ்சாலை துறை..? - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 20 May 2026

பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத நெடுஞ்சாலை துறை..?


கடலூர் மாவட்டம் புவனகிரி ஒன்றியத்துக்கு உட்பட்ட அய்யனார் கோவில் முதல் ஆலம்பாடி வரை சாலை விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது இதற்காக தற்பொழுது உள்ள சாலையில் பக்கவாட்டில் மண் அகற்றப்பட்டு சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது இந்நிலையில் சுமார் மூன்று அடிக்கு மேல் சாலை ஓரத்தில் ஜேசிபி இயந்திரம் மூலம் மண் எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் எச்சரிக்கை டேப் மற்றும் சாலை தடுப்புகள் இல்லாமல் நடைபெறும் சாலை விரிவாக்க பணியின் காரணமாக இரவு நேரங்களில் அவ்வழியே செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர் மேலும் பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றாமல் நடைபெறும் சாலை விரிவாக்க பணியால் இருசக்கர வாகனத்தில் செல்லூம் வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாக வாய்ப்புள்ளதாக அப்பகுதியினர் தெரிவிக்கின்றனர்.

எனவே துறை சார்ந்த அதிகாரிகள் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி சாலை விரிவாக்க பணியை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

*/