சேத்தியாத்தோப்பு காவல் நிலைய புதிய உதவி ஆய்வாளராக சி. முரளி பொறுப்பேற்றார். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 28 May 2026

சேத்தியாத்தோப்பு காவல் நிலைய புதிய உதவி ஆய்வாளராக சி. முரளி பொறுப்பேற்றார்.

 


கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு காவல் நிலையத்தின் புதிய காவல் உதவி ஆய்வாளராக சி. முரளி இன்று காலை 10.00 மணியளவில் அதிகாரப்பூர்வமாகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

இதற்கு முன்னதாக, இவர் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வந்தார். தற்போது அங்கிருந்து பணி மாறுதல் பெற்று, சேத்தியாத்தோப்பு காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.

இன்று காலை காவல் நிலையம் வந்தடைந்த அவருக்கு, சக காவலர்கள் மற்றும் பொதுமக்கள் தரப்பில் வாழ்த்துகளும் வரவேற்பும் தெரிவிக்கப்பட்டது. பொறுப்பேற்றுக் கொண்ட புதிய உதவி ஆய்வாளர் சி. முரளி, அப்பகுதியின் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கவும், குற்றச் செயல்களைத் தடுக்கவும் முழு வீச்சில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்.

No comments:

Post a Comment

*/