ஊராட்சிக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமிப்பு செய்து வரும் தனிநபர் கண்டுகொள்ளாத ஊராட்சி செயலாளர். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 28 May 2026

ஊராட்சிக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமிப்பு செய்து வரும் தனிநபர் கண்டுகொள்ளாத ஊராட்சி செயலாளர்.

 


கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டம் மருதூர் ஊராட்சியில் கிராம ஊராட்சிக்கு சொந்தமான ஊராட்சி மன்ற அலுவலகம் அரசு நத்தம் சர்வே எண், 114/60, அரசுக்கு சொந்தமான பழமையான அங்கன்வாடி மையம் அரசு நத்தம் சர்வே எண்,114/62, ஆகிய இரு இடங்களை தனிநபர் ஆக்கிரமித்து வீடு கட்டி வருவதால் அரசு அலுவலகங்கள் பத்தாயிரம் கொள்ளளவு கொண்ட அரசு மேல்நிலை நீர் தேக்க தொட்டி மற்றும் நீர் மோட்டார் அறை கொட்டகை ஆகிய அரசுக்கு சொந்தமான சொத்துக்கள் தனிநபரின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது அரசு சொத்து என்பது மக்களுக்கான பொது சொத்து அதைப் பாதுகாக்க வேண்டிய அதிகாரிகள் அலட்சியம் காட்டக்கூடாது இதனால் அருகில் உள்ள வாய்க்கால் படித்துறையில் பெண்கள் குளிப்பதற்கும் துணிகள் துவைப்பதற்கும் இடையூறாக இருப்பதனால் ஊராட்சி நிர்வாகம் உடனடியாக தலையிட்டு அரசுக்கு சொந்தமான இடத்தையும் ஊராட்சி அலுவலக கட்டிடத்தையும் மீட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பொது மக்களின் கோரிக்கையாக உள்ளது நடவடிக்கை எடுக்குமா ஊராட்சி நிர்வாகம் பொறுத்திருந்து பார்ப்போம்.

No comments:

Post a Comment

*/