கடலூர் மாவட்டத்தில் உள்ள பல டாஸ்மாக் கடைகளில் கூடுதலாக பத்து ரூபாய் வசூலிக்கப்படுவதால் மது பிரியர்கள் வேதனையடைந்துள்ளனர் கடலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட நெய்வேலி வடலூர் விருத்தாச்சலம் குறிஞ்சிப்பாடி ஆகிய பகுதிகளில் தமிழக அரசின் உத்தரவை மீறி கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது கோட்டருக்கு பத்து ரூபாய் முதல் ரூ. 20 வரை அதிகம் வசூலிக்கப்படுவதாக மது பிரியர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர் குறிப்பாக நகரப் பகுதிகள் உள்ளது கிராமப்புறங்களில் உள்ள டாஸ்மார்க் கடைகளில் இது போன்ற சம்பவம் தொடர்கதையாக நடந்து வருவதாக புகார் எழுந்துள்ளது.
நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக மது விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று டாஸ்மார்க் நிர்வாகம் அறிவித்துள்ள நிலையில் கடலூர் மாவட்டத்தில் பல பகுதிகளில் நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு அதிகமாக கூடுதலாக 10 முதல் 20 ரூபாய் வசூலிக்கப்படுகிறது இதுகுறித்து ஒரு சில மது பிரியர்கள் வாக்குவாதத்தில் விற்பனையாளர்களிடம் ஈடுபடும் நிலையில் அவர்களுக்கு மட்டும் பாட்டிலுக்கு 150 ரூபாய் தரப்படும் நிலையில் மீதமுள்ள மதிப்பிடியர்களுக்கு வழக்கம் போலவே 160 ரூபாய் பெறப்படுவது குடிமகன்கள் மத்தியில் மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து பல்வேறு புகார்கள் எழுந்து வரும் நிலையில் மாவட்ட நிர்வாகம் இதனை கண்டு கொள்வதில்லை என்று மது பிரியர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
கூடுதலான விலைக்கு மது விற்பனை செய்து வரும் விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை பாயுமா என பொறுத்திருந்து பார்ப்போம்.
பல்வேறு மாவட்டங்களில் கூடுதலாக விலைக்கு மது விற்பனை செய்யப்பட்டு வரும் விற்பனையாளர்கள் மற்றும் மாவட்ட மேலாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில் கடலூர் மாவட்டத்தில் மட்டும் நடவடிக்கை எடுக்காமல் மாவட்ட நிர்வாகம் காலம் தாழ்த்தி வருவது மது பிரியர்கள் மத்தியில் முக சுழிப்பை ஏற்படுத்தி உள்ளது.

No comments:
Post a Comment