கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவின் பேரில், திட்டக்குடி துணை காவல் கண்காணிப்பாளர் பார்த்திபன் மேற்பார்வையில் தீவிர சோதனை நடத்தப்பட்டது. ராமநத்தம் காவல் ஆய்வாளர் தலைமையிலான குழுவினர் நடத்திய இந்த சோதனையில் 87 கிலோ தடை செய்யப்பட்ட ஹான்ஸ் குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ராமநத்தம் காவல் சரகத்திற்குட்பட்ட தொழுதூர் தச்சூர் சாலையில் உள்ள பாலாஜி ஏஜென்சீஸ் என்ற சாக்லேட் மற்றும் மிக்சர் கடை தடை செய்யப்பட்ட ஹான்ஸ் பாக்கெட்டுகளை கொரியர் மூலம் மொத்தமாக வரவழைத்து, சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு விற்பனை செய்து வந்துள்ளனர்.
விசாரணை செய்து கைது செய்தனர் அருள்ராஜ் வயது 38தகப்பனார் பெயர் தங்கராசு மாரியம்மன் கோவில் தெரு, பசும்பலூர் கிராமம், பெரம்பலூர் மாவட்டம்.
கைப்பற்றப்பட்ட 87 கிலோ ஹான்ஸ் பாக்கெட்டுகள் ராமநத்தம் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அருள்ராஜ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, காவல் துறையினர் மேல் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:
Post a Comment