சேத்தியாத்தோப்பில் அதிமுகதெற்குமாவட்ட செயலாளர் நிர்வாகிகளுடன் ஆலோசனை. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 23 May 2026

சேத்தியாத்தோப்பில் அதிமுகதெற்குமாவட்ட செயலாளர் நிர்வாகிகளுடன் ஆலோசனை.

 


கடலூர் மாவட்டம் கடலூர் அதிமுக தெற்கு மாவட்ட செயலாளரும், நெய்வேலி சட்டமன்ற உறுப்பினருமான சொரத்தூர் ராஜேந்திரன் இருந்து வருகிறார். தற்போது விருத்தாசலம், புவனகிரி திட்டக்குடி சட்டமன்ற தொகுதிகள் அதிமுக பொதுச்செயலாளரால்

கடலூர் தெற்கு மாவட்டத்துடன் இணைக்கப்பட்டன.

இந்நிலையில் நேற்று (22/05/24) புவனகிரி சட்டமன்ற தொகுதி சேத்தியாத்தோப்பு குறுக்கு ரோட்டிற்கு சொரத்தூர் ராஜேந்திரன் வருகை தந்தார். அதிமுக நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர்எம்ஜிஆர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்தும், ஜெயலலிதா திருவுருவப்படத்திற்கு மலர் தூவியும் மரியாதை செய்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். பின்னர் அங்குள்ள அதிமுக அலுவலகத்திற்குச் சென்று அதிமுகவின் ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தினார். கட்சி வளர்ச்சிக்காக யார் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் என்னை ஃபோனில் தொடர்பு கொண்டு அழைக்கலாம் என்று கூறினார். 

       இந்நிகழ்ச்சியில் மாநில எம் ஜி ஆர் மன்ற செயலாளர் முருகுமணி, மாநில எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் கே பி டி இளஞ்செழியன், ஒன்றிய செயலாளர்கள் சிஎன்.சிவபிரகாசம், விநாயகமூர்த்தி, கருப்பன், மருதை முனுசாமி, சீனிவாசன் மற்றும் நகர செயலாளர்கள் மணிகண்டன், செல்வகுமார் மற்றும் ஊராட்சி செயலர் ஜெயசீலன், மாவட்ட அம்மா பேரவைத் தலைவர் எஸ் கே நன்மாறன், மாவட்ட பொருளாளர் அய்யா சாமி, மாவட்ட துணைச் செயலாளர் ரவிச்சந்திரன், ஒன்றிய துணைச் செயலாளர் பிரித்திவி, மாவட்ட இணை செயலாளர் செஞ்சிலட்சுமி, மாவட்ட எம்ஜிஆர் மன்ற தலைவர் பாஸ்கர், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் ஆர்டிஆர் ரமேஷ், அமைப்புசாரா ஓட்டுநர் அணி பிரகாஷ், வளையமாதேவி செல்வராஜ், மூங்கிலடி சரவணன், லட்சுமி நாராயணன்,மகளிர் அணி இந்திரா, வீராணம் மணிகண்டன், சபரி ராஜா, சத்குரு மற்றும் பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

*/