காட்டுமன்னார்கோயில் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள நந்திமங்கலம் கிராமத்தில் தவர்த்தாம்பட்டு கிராம பொதுமக்கள் சார்பாக பாரம்பரிய கெடா வெட்டு படையல் திருவிழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இவ்விழாவில் தவர்த்தாம்பட்டு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர் விழாவின் முக்கிய நிகழ்வாக, கிராமத்து தாய்மார்கள் பாரம்பரிய முறைப்படி மாவிலக்கு சட்டி எடுத்து வந்தும், களி மற்றும் சுண்டல் ஆகியவற்றை அம்மனுக்கு படையலிட்டும் தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்தி பக்திப் பெருக்குடன் பிரார்த்தனை செய்தனர்.
இதனைத் தொடர்ந்து, பாரம்பரிய முறைப்படி கெடா வெட்டப்பட்டு அம்மனுக்கு சிறப்பு படையல் இடப்பட்டது. இந்த விழாவில் நந்திமங்கலம் மற்றும் தவர்த்தாம்பட்டு கிராம மக்கள், சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஆன்மீக பக்தர்கள் என திரளானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் நேர்த்திக்கடன் பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது.

No comments:
Post a Comment