ஸ்ரீமுஷ்ணம் ஸ்ரீ பூவராக சுவாமி கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்து வருகின்றனர்.. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 29 April 2026

ஸ்ரீமுஷ்ணம் ஸ்ரீ பூவராக சுவாமி கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்து வருகின்றனர்..

 


கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான ஸ்ரீ பூவராக ஸ்வாமி கோவில் அமைந்துள்ளது. இந்த பூவராக சுவாமி கோவிலின் சித்திரை திருவிழா தேரோட்டம் நிகழ்ச்சிக்காக கடந்த சில தினங்களுக்கு முன்பு கோவிலின் காப்பு கட்டுதல், கொடியேற்றத்துடன் துவங்கி தினமும் சுவாமி அபிஷேகம் அலங்காரம் மகா தீபாராதனை பக்தர்கள் வழிபாடு என பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில் இன்று சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெற்று வருகிறது. உற்சவ மூர்த்தியான யக்ஞவராகவன், ஸ்ரீதேவி, பூதேவியுடன் தேரில் எழுந்தருளி அமர்ந்து பக்தர்களுக்கு காட்சி அளித்து அருளாசிகளை வழங்கி வருகிறார். தேரானது நகரின் அனைத்து முக்கிய வீதிகளின் வழியாகவும் வருகை தந்து பக்தர்கள் வழிபாடு செய்து வருகின்றனர். பல்வேறு இடங்களில் இருந்து வருகை தந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று கோவிந்தா கோவிந்தா என்ற கோஷம் முழங்க தேரினை வடம் பிடித்து இழுத்து வருகின்றனர். இதனையடுத்து மட்டையடி உற்சவம், தெப்ப உற்சவம் என விழா நிகழ்ச்சிகள் தொடர்ந்து வருகின்ற நாட்களில் நடைபெறுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

*/