தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் குறுக்கே வாகன ஓட்டிகள் கடக்க முயலும் போது விபத்துக்களை தடுக்க ஆய்வாளர் செய்த செயல் எஸ்பி பாராட்டு. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 30 April 2026

தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் குறுக்கே வாகன ஓட்டிகள் கடக்க முயலும் போது விபத்துக்களை தடுக்க ஆய்வாளர் செய்த செயல் எஸ்பி பாராட்டு.

 


கடலூர் சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில்செம்மங்குப்பம் அருகே தேசிய நெடுஞ்சாலையின் மையப்பகுதியில் கொட்டப்பட்டிருந்த மணல்மேட்டைப் பயன்படுத்தி, இருசக்கர வாகன ஓட்டிகள் குறுக்கு வழியில் சாலையைக் கடந்து வந்தனர். இதனால் வேகமாக வரும் வாகனங்கள் மோதி விபத்துகள் ஏற்படும் அபாயம் இருந்தது. கடலூர் முதுநகர் காவல் ஆய்வாளர் ஏழுமலை, தனது காவலர்களுடன் சம்பவ இடத்திற்குச் சென்றார். விபத்தைத் தடுக்க, அவரே முன்னின்று மண்வெட்டி கடப்பாரை ஆகியவற்றைக் கொண்டு சாலையின் மையப்பகுதியில் இருந்த மணல்மேட்டை அகற்றி, சாலையைச் சரி செய்தார். இதனால் குறுக்கு வழியில் சாலையைக் கடக்கும் அபாயம் தவிர்க்கப்பட்டு வாகன போக்குவரத்து சீராக இயங்க வழிவகை செய்தார்.

தேசிய நெடுஞ்சாலையில் விபத்து ஏற்படுவதை தடுக்கும் பொருட்டு, தானே முன்னின்று மண்மேட்டை அகற்றிய கடலூர் முதுநகர் காவல் ஆய்வாளர் செயலை கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  S.ஜெயக்குமார் IPS வெகுவாகப் பாராட்டினார்.


தமிழக குரல் கடலூர் மாவட்டம் இணையதள செய்தி பிரிவு மாவட்ட ஒளிப்பதிவாளர்  

P ஜெகதீசன்.

No comments:

Post a Comment

*/