கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் வட்டம், ஆண்டிப்பாளையம் கிராமத்தில் இன்று வழங்கப்பட்ட விலையில்லா அரிசி முற்றிலும் தரம் குறைந்த நிலையில் காணப்பட்டது. அரிசி மூட்டைகளில் வண்டுகளும் பூச்சிகளும் மேய்ந்த்துக் கொண்டிருந்ததை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். 'இந்த அரிசியை எப்படி உணவாகப் பயன்படுத்த முடியும் என ஆவேசத்துடன் கேள்வி எழுப்பும் கிராம மக்கள், மாவட்ட ஆட்சியர் உடனடியாக தலையிட்டு தரமான அரிசி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு மாவட்ட ஒளிப்பதிவாளர்
P ஜெகதீசன்.

No comments:
Post a Comment