கடலூர் மாவட்டம் நடுவீரப்பட்டு பகுதியில் இன்று காலை விளையாடிக் கொண்ருந்த 2 வயது குழந்தை மர்ம நபர்களால் கடத்தப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. ஜெயக்குமார் உத்தரவின் பேரில், காவல்துறையினர் எல்லைகளை மூடி தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இதற்கிடையில், அருகிலுள்ள பகுதியில் குழந்தை அழுது கொண்டிருப்பதை கவனித்த அன்பு 22 என்ற இளைஞர், குழந்தையை மீட்டு உடனடியாக காவல்துறையிடம் ஒப்படைத்தார். மீட்கப்பட்ட குழந்தைக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு, நலமுடன் இருப்பதை உறுதி செய்த பின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. குழந்தையின் உயிருக்கு ஆபத்து நேராமல் மீட்ட இளைஞர் அன்பு மற்றும் துரிதமாக செயல்பட்ட காவல்துறையினரை பொதுமக்கள் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.
தமிழக குரல் இணைய தள செய்தி பிரிவு கடலூர் மாவட்டம்
மாவட்ட ஒளிப்பதிவாளர்
P ஜெகதீசன்.

No comments:
Post a Comment