சொந்த வாழ்க்கையின் முக்கிய தருணத்திலும், நாட்டின் ஜனநாயகக் கடமையே முதன்மையானது என்பதைச் சிதம்பரத்தில் ஒரு புதுமணத் தம்பதி நிரூபித்துக் காட்டியுள்ளனர்.
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் நேற்று வியாழக்கிழமை ஒரு திருமணம் நடைபெற்றது திருமணம் முடிந்து தாலி கட்டிய கையோடு, மணமக்கள் இருவரும் தங்கள் இல்லத்திற்குச் செல்வதற்கு முன்பாக நேராக வாக்குச்சாவடிக்குச் செல்ல முடிவெடுத்தனர்.
அதன்படி, மணப்பெண் அக்ஷயா தனது திருமணக் கோலத்திலேயே பட்டுப்புடவை மற்றும் ஆபரணங்களுடன் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உள்ள கோகலை ஹால் வாக்குச்சாவடிக்கு வருகை தந்தார்.மணமகனுடன் வந்த அவர் வரிசையில் நின்று ஆர்வத்துடன் தனது வாக்கினைப் பதிவு செய்தார்.
மணமக்களின் கருத்து
வாக்களித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய மணமக்கள், திருமணம் என்பது வாழ்வின் முக்கிய நிகழ்வு என்றாலும், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான நம் நாட்டின் தலைவிதியைத் தீர்மானிக்கும் வாக்குரிமை அதைவிட முக்கியமானது. அனைவரும் மறக்காமல் தங்களின் ஜனநாயகக் கடமையை ஆற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தவே இந்த முயற்சியை மேற்கொண்டோம்," எனத் தெரிவித்தனர்.
திருமணக் கோலத்தில் வந்து வாக்களித்த மணப்பெண்ணை அங்கிருந்த தேர்தல் அலுவலர்களும், பொதுமக்களும் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சிதம்பரத்தில் திருமணம் முடிந்த கையோடு அண்ணாமலை பல்கலைக்கழக வாக்குச்சாவடிக்கு மணக்கோலத்திலேயே வந்து வாக்களித்தார் மணப்பெண் அக்ஷயா. திருமணம் முடிந்தாலும், நாட்டின் மீதான கடமை முக்கியம்" எனப் பலருக்கும் முன்மாதிரியாகத் திகழும் இந்த தம்பதிக்குப் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

No comments:
Post a Comment