கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே சேத்தியாத்தோப்பு முருகன் கோவில் தெருவில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத பாலமுருகன் திருக்கோவில். இந்தக் கோவிலின் பங்குனி உத்திர விழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்க நடைபெற்றது. முன்னதாக பங்குனி மாதம் ஒன்பதாம் தேதியில் யாகசாலை பூஜையில் ஆரம்பித்து கொடியேற்றுதல், காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. அதன் பின்னர் தினமும் கோவிலில் பல்வேறு வழிபாடுகள், பூஜைகள் நடைபெற்று திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வந்த நிலையில் விழாவின் சிகர நிகழ்வாக பங்குனி உத்திரப்பெரு விழா நடைபெற்றது. ஆற்றங்கரையிலிருந்து பறக்கும் காவடி, பால் காவடி ஊர்வலம், அலகு குத்துதல், பால்குடம் சுமந்து தாரை தப்பட்டை, மேளம் முழங்க பல்வேறு வேண்டுதலோடு ஆலயத்திற்கு வருகை தந்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். இந்தப் பங்குனி உத்திர பெருவிழாவில் பல்வேறு பகுதிகளில் வருகை தந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று மூலவர் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத பாலமுருகனை வணங்கியும் சென்றனர்.

No comments:
Post a Comment