காட்டுமன்னார்கோயில் சட்டமன்றத் தொகுதியில் திருமாவளவன் போட்டி இல்லை என அறிவிப்பு..? - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 5 April 2026

காட்டுமன்னார்கோயில் சட்டமன்றத் தொகுதியில் திருமாவளவன் போட்டி இல்லை என அறிவிப்பு..?

 


மிக முக்கியமான தற்போதைய அரசியல் மாற்றம்.

2026 சட்டமன்றத் தேர்தலில் காட்டுமன்னார்கோயில் தொகுதியில் திருமாவளவன்  போட்டியிடுவார் என்று முதலில் அறிவிக்கப்பட்டிருந்தாலும், கடைசி நேரத்தில் அவர் தனது முடிவை மாற்றிக்கொண்டுள்ளார். அவருக்குப் பதிலாக தலித் மக்களின் மூத்த தலைவர் மறைந்த எல். இளையபெருமாள் இளைய மகன் ஜோதிமணி விசிக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்த அதிரடி மாற்றத்திற்கான சில முக்கிய காரணங்களாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுபவை:


கூட்டணியைப் பாதுகாத்தல் தான் போட்டியிடுவதால் தேவையில்லாத அரசியல் விமர்சனங்கள் எழுவதைத் தவிர்க்கவும், திமுக தலைமையிலான கூட்டணிக்கு எந்த பின்னடைவும் ஏற்படக்கூடாது என்பதற்காகவும் இந்த "யுத்த தந்திர முடிவை எடுத்துள்ளதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார்.


போன முறை போட்டியில் வெற்றி பெற்ற சிட்டிங் எம் எல் ஏ சிந்தனைச் செல்வன் உள்ளார் குறிப்பிடத்தக்கது.

 

மாநிலம் தழுவிய பிரச்சாரம் ஒரு குறிப்பிட்ட தொகுதியில் மட்டும் கவனம் செலுத்தாமல், கூட்டணி போட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வெற்றியை உறுதி செய்ய அவர் திட்டமிட்டுள்ளார் என் கூறுகின்றனர்.

 

வரலாற்று ரீதியான மரியாதை பட்டியலின மக்களின் உரிமைக்காகப் போராடிய மாபெரும் தலைவர் இளையபெருமாள் அவர்களுக்குப் பெருமை சேர்க்கும் விதமாக அவருடைய மகனுக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.


திருமாவளவன் சட்டமன்றத்திற்குள் நுழைய வேண்டும் என்று அவரது தொண்டர்கள் விரும்பிய நிலையில், கட்சியின் நலன் மற்றும் கூட்டணியின் ஒற்றுமை கருதி அவர் எடுத்த இந்த முடிவு 2026 தேர்தல் களத்தில் விசிக-வின் ஒரு முக்கிய நகர்வாகப் பார்க்கப்படுகிறது என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்..

No comments:

Post a Comment

*/