முதல் அமைச்சராக மு.க.ஸ்டாலின் மீண்டும் பதவியேற்க அங்காளம்மன் கோவிலில் தெய்வீக பக்தர்கள் பேரவையினர் மண் சோறு சாப்பிடும் நிகழ்ச்சி.. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 30 April 2026

முதல் அமைச்சராக மு.க.ஸ்டாலின் மீண்டும் பதவியேற்க அங்காளம்மன் கோவிலில் தெய்வீக பக்தர்கள் பேரவையினர் மண் சோறு சாப்பிடும் நிகழ்ச்சி..

 


திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்கள் 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று முதல் அமைச்சர் மு. க .ஸ்டாலின் மீண்டும் பதவியேற்க திராவிட மடல் 2.0 ஆட்சி தொடர மக்கள் தீர்ப்புடன் தெய்வங்களின் ஆசி வேண்டி சிதம்பரத்தில் உள்ள அங்காளம்மன் கோவிலில் தெய்வீக பக்தர்கள் பேரவை சார்பில் சிறப்பு அபிஷேக அர்ச்சனை மற்றும் மண் சோறு சாப்பிடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கும் மே 4- ந் தேதி வெளியாகவுள்ள தேர்தல் முடிவுகள் மிகுந்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது. விசேஷ பூஜைகளும் வழிபாடுகளும் இத்தேர்தலில் ஒரு முக்கிய அங்கமாக மாறியுள்ளன இந்நிலையில் தெய்வீக பக்தர் பேரவையினர் கடந்த மார்ச் 13 -ம் தேதி முதல் 48 நாட்கள் விரதம் இருந்து 29 _ந் தேதி அங்காளம்மனுக்கு சக்கரை பொங்கல் வைத்து படைத்து , மண்சோறு சாப்பிடும் நிகழ்ச்சி சிதம்பரத்தில் உள்ள அங்காளம்மன் கோவிலில் நடைபெற்றது.

தெய்வீக பக்தர்கள் பேரவை நிறுவனத் தலைவர் ஜெமினி எம்.என் ராதா தலைமையில் மாநில தலைவர்கள் ஆர். சம்பந்த மூர்த்தி செல்வகுமார் பொதுச் செயலாளர்கள் வேல்முருகன் செந்தில்குமார் விஜயகுமார் ரகோத்தமன் டிரைவர் ரவி பிரபு பால் மணி பரணி விக்கி சீனிவாசன் ராஜா உட்பட மற்றும் பலர் கலந்துகொண்டு மண் சோறு சாப்பிட்டு சிறப்பு அபிஷே அர்ஜனை யில் கலந்து கொண்டு காணிக்கை செலுத்தினர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இது குறித்து தெய்வீக பக்தர்கள் பேரவை நிறுவன தலைவர் ஜெமினி எம்.என் ராதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது, 

தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது தி.மு.க வை இந்து விரோத கட்சியாக சித்தரிக்க வேண்டும் என்று பா.ஜ.க ,அ.தி.மு.க, பா.ம.க போன்ற கட்சிகள் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

இந்து சமய அறநிலைத்துறை மூலம் 4182 திருக்கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்திய திராவிட மாடர் ஆட்சியின் முதல் அமைச்சர் மு. க .ஸ்டாலின் துணை முதல் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் மேற்கொண்ட பிரச்சாரம் மற்றும் முதல் அமைச்சர் மு. க. ஸ்டாலின் துணைவியார் துர்கா ஸ்டாலின் மேற்கொண்ட ஆன்மீக பயணத்தின் தெய்வ வழிபாட்டால் பா.ஜ.க நினைத்தது தமிழகத்தில் நடைபெறவில்லை.மக்களின் ஆதரவாளும் தெய்வத்தின் ஆசியாலும் தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி வேட்பாளர்கள் 200 தொகுதிகளு க்குமேல் வெற்றி பெற்று மீண்டும் முதல் அமைச்சராக மு. க .ஸ்டாலின் பதவி ஏற்பார் இவ்வாறு அதில் கூறினார்


தமிழக குரல் கடலூர் மாவட்டம் இணையதள செய்தி பிரிவு மாவட்ட ஒளிப்பதிவாளர் 

 P ஜெகதீசன்.

No comments:

Post a Comment

*/