சேத்தியாத்தோப்பு கடலூர் மாவட்ட அமைச்சூர் கிக் பாக்சிங் சங்கம் சார்பில் மாவட்ட அளவிலான கிக் பாக்சிங் சாம்பியன்ஷிப் போட்டி சேத்தியாதோப்பு பூதங்குடி. எஸ்.டி சீயோன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இப் போட்டிக்கு பள்ளியின் இயக்குனரும் குழந்தைகள் நல மருத்துவருமான தீபா சுஜின் தலைமை தாங்கினார். கடலூர் மாவட்ட கிக்பாக்சிங் சங்க துணைச் செயலாளர் சென்சாய். வி.ரெங்கநாதன் அனைவரையும் வரவேற்றார். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி சிறப்புரையாற்றினார். பள்ளியின் தாளாளர்சாமுவேல் சுஜின். இப்போட்டி லைட் காண்டாக்ட், மியூசிகல் பாம்,கிக் லைட்., லோகிக், பாயிண்ட் ஃபைட்என பல்வேறு பிரிவுகளில் நடைபெற்றது. இப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் அடுத்த மாதம் தேனி மாவட்டத்தில்7முதல் 10ஆம் தேதி வரை நடைபெறும் மாநில அளவிலான கிக் பாக்ஸிங் போட்டியில் கலந்து கொள்வதற்கு தகுதி பெற்றனர். இப் போட்டியில் மாவட்ட பொறுப்பாளர்கள் உதயகுமார்,கண்ணன், சம்மத், சத்யராஜ், இளவரசன், சத்தியமூர்த்தி,பாஸ்கர், ரவிக்குமார்ஆகியோர் பங்கு பெற்றனர். விழா முடிவில் இளவரசன் நன்றி கூறினார்.

No comments:
Post a Comment