கடலூர் மாவட்டம் புவனகிரி தொகுதியின் திமுக வேட்பாளராக துரை.கி. சரவணன் போட்டியிடுகிறார். இவர் இன்று கம்மாபுரம் அருகேயுள்ள தேவங்குடி, பவழங்குடி, மேலப்பாளையூர் மற்றும் சில கிராமங்களில் கோவிலில் சாமி தரிசனம் செய்து தனது தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கினார். திமுகவின் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், விசிக, தேமுதிக மற்றும் ஏனைய கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகளும், தொண்டர்களும் இரு சக்கர வாகனங்களில் அணிவகுத்து வந்து உதயசூரியனுக்கு வாக்குக்கேட்டனர். மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து பயணம் தொடரவும், மாதம் 2000 ரூபாய் அனைத்து மகளிரும் பெறவும் மற்றும் திமுகவின் தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டுள்ள அனைத்து மக்கள் நல திட்டங்களையும் நிறைவேற்றிடவும்,திராவிட மாடல் அரசு மீண்டும் தொடர்ந்திடவும் அனைவரும் உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்குமாறு துரை.கி. சரவணன் கிராமப் பொது மக்களிடம் கோரிக்கை வைத்து தனது பரப்புரையை மேற்கொண்டார்.

No comments:
Post a Comment