புதுச்சேரி மதுபானம் கடத்தல் கார் மற்றும் 132 மதுபாட்டில்கள் பறிமுதல் ஸ்ரீமுஷ்ணம் சேர்ந்த இருவர் கைது.. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 30 April 2026

புதுச்சேரி மதுபானம் கடத்தல் கார் மற்றும் 132 மதுபாட்டில்கள் பறிமுதல் ஸ்ரீமுஷ்ணம் சேர்ந்த இருவர் கைது..

 


கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. ஜெயக்குமார் IPS உத்தரவின் பேரில், மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர் துணைக் காவல் கண்காணிப்பாளர் 

தி கந்தன் மேற்பார்வையில், மதுவிலக்கு அமல் பிரிவு காவல் ஆய்வாளர் முத்துலட்சுமி தலைமையிலான போலீசார் அழகியநத்தம் சோதனைச் சாவடியில் வாகனத் தணிக்கை மேற்கொண்டனர். அப்போது புதுச்சேரியிலிருந்து வந்த நிசான் மைக்ரோ PY 01 BU 2733 காரை நிறுத்தி சோதனை செய்தபோது விற்பனைக்காக கடத்தி வரப்பட்ட 132 மதுபாட்டில்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

கைது செய்யப்பட்டவர்கள் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட கார் மற்றும் மதுபாட்டில்களைப் பறிமுதல் செய்த போலீசார், இதில் தொடர்புடைய இருவரைப் பிடித்துள்ளனர்

 

இளவரசன் 42 த/பெ காசிநாதன், நடுத்தெரு, பூ.குடிகாடு, ஸ்ரீமுஷ்ணம் தாலுக்கா.

 செல்வகுமார் 52 த/பெ ராமலிங்கம் கிழக்கு தெரு பூ.குடிகாடு ஸ்ரீமுஷ்ணம் தாலுக்கா.

தற்போதைய நிலை

கைது செய்யப்பட்ட இருவரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மதுக்கடத்தலைத் தடுத்த மதுவிலக்கு அமல் பிரிவு போலீசாரின் இந்த அதிரடி நடவடிக்கையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டியுள்ளார்


தமிழக குரல் கடலூர் மாவட்டம்,

இணையதள செய்தி பிரிவு மாவட்ட ஒளிப்பதிவாளர்.

P ஜெகதீசன்.

No comments:

Post a Comment

*/