கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ள கூடலையற்றூர் கிராமத்தில் அமைந்துள்ள 800 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ ஞான சக்தி ஸ்ரீ பராசக்தி சமேத நர்த்தன வல்லபேஸ்வரர் கோவிலில் 18 ஆண்டுகளுக்குப் பிறகு தெப்ப உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. இந்த கோவிலின் ஆண்டு திருவிழா ஒரு வாரத்திற்கு முன்பு கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து மூலவர் ஞான சக்தி சமேத நர்த்தன வல்லபேஸ்வரருக்கு தினமும் அபிஷேகம், அலங்காரம், பல்வேறு பூஜைகள் மற்றும் சுவாமி ஊர்வலங்கள் நடைபெற்றன.
விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளாக திருக்கல்யாணம், தேரோட்டம், சுவாமி தீர்த்தவாரி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றதை தொடர்ந்து விழாவின் நிறைவு நிகழ்வாக தெப்ப உற்சவம் நடைபெற்றது. கோவிலுக்கு அருகிலுள்ள உற்சவக் குளத்தில் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் ஞான சக்தி சமேத நர்த்தன வல்லபேஸ்வரர் பல்வேறு வண்ண மலர்களாலும் பட்டாடைகளாலும் அலங்கரிக்கப்பட்டு தெப்பத்தில் எழுந்தருளி அமர்ந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
18 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த தெப்ப உற்சவம் நடைபெற்றதால் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பெருந்திரளான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.

No comments:
Post a Comment