சிதம்பரம் அருகே நின்ற காரில் திடீர் தீ – பயணிகள் உயிர் தப்பி பரபரப்பு. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 30 March 2026

சிதம்பரம் அருகே நின்ற காரில் திடீர் தீ – பயணிகள் உயிர் தப்பி பரபரப்பு.


கடலூர், மார்ச் 30:


கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே பெரியண்ணா குளம் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் திடீரென தீப்பிடித்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. நாஞ்சலூர் ராணிநகர் பகுதியை சேர்ந்த பாக்யராஜ் (தந்தை: ஐய்யார்) தனது குடும்பத்தினருடன் TN 07 AP 3675 என்ற FORT காரில் பரங்கிப்பேட்டை சாமியார்பேட்டை கடற்கரைக்கு சென்று விட்டு திரும்பிக் கொண்டிருந்தார். அவருடன் ஓட்டுநர் பிரவீன் (32), சிலம்பரசன் (37), ராகுல் (16), ராகவன் (16), ரோஷினி (12), தமிழினி (5) உள்ளிட்டோர் இருந்தனர்.


சிதம்பரம் அருகே பெரியண்ணா குளம் பகுதியில் கார் நிறுத்தி காய்கறி வாங்கிக் கொண்டிருந்தபோது திடீரென காரில் இருந்து புகை எழத் தொடங்கியது. இதைக் கண்ட உடனே காருக்குள் இருந்தவர்கள் அலறியடித்து வெளியேறினர். இதனால் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.


இதுகுறித்து தகவல் அறிந்த சிதம்பரம் காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, தீயை முழுமையாக அணைத்தனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. தொடர்ந்து, சிதம்பரம் காவல்துறையினர் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment

*/