கடலூர் மாவட்டம் குமராட்சியில் உள்ள சந்தை திடலில் அகிம்சை வெற்றி கழகம் சார்பில் மாநில தலைவர் அறிமுக கூட்டம் நடைபெற்றது. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 4 March 2026

கடலூர் மாவட்டம் குமராட்சியில் உள்ள சந்தை திடலில் அகிம்சை வெற்றி கழகம் சார்பில் மாநில தலைவர் அறிமுக கூட்டம் நடைபெற்றது.


கடலூர், மார்ச். 04:


கடலூர் மாவட்டம் குமராட்சியில் உள்ள சந்தை திடலில் அகிம்சை வெற்றி கழகம் சார்பில் மாநில தலைவர் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கழகத்தின் நிறுவன தலைவர் காந்தியவாதி காந்தி சங்கர் தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது. கூட்டத்தில் பல்வேறு அரசியல் மற்றும் சமூக பிரச்சினைகள் குறித்து அவர் உரையாற்றினார்.


அவரது உரையில், மாநில அரசின் நிர்வாகம் மற்றும் குடும்ப அரசியல் குறித்து விமர்சனம் செய்ததுடன், மதுவிற்பனை, கனிம வள சுரண்டல், கல் குவாரி மற்றும் மணல் சுரண்டல் போன்ற பிரச்சினைகள் குறித்து பேசினார். மேலும் தமிழக அரசியலில் மாற்றம் தேவை எனவும் வலியுறுத்தினார்.


இந்த நிகழ்ச்சியில் “தலித் தளபதி” என அழைக்கப்படும் தலைவரை அகிம்சை வெற்றி கழகத்தின் மாநில தலைவராக அறிமுகப்படுத்தினர். கூட்டத்தில், கடலூர் மாவட்ட தலைவர் கே. பழனிசாமி, கள்ளக்குறிச்சி மாவட்ட தலைவர் எல். நிவாஸ், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் நன்றி உரையை கடலூர் மாவட்ட கௌரவ தலைவர் பூபதி வழங்கினார்.


மேலும் அகில இந்திய தலைவர்கள் குழு சார்பில் கடலூர் மாவட்ட தலைவர் கனக புஷ்பராஜ், மாவட்ட பொதுச் செயலாளர் எஸ். கந்தசாமி, மாநில மகளிர் அணி செயலாளர் சி.வி. புஷ்பா காந்தி, மாவட்ட இளைஞர் அணி தலைவர் ஜே. சரண் ராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் இறுதியில் மேடையில் கலந்து கொண்டவர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

No comments:

Post a Comment

*/