கடலூர் மாவட்ட தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின் தெற்கு மாவட்ட துணைச் செயலாளர் எஸ்.ஆர். ராஜாவன்னியன் தலைமையில், ஸ்ரீமுஷ்ணம் மேற்கு ஒன்றிய செயலாளர் ராஜேந்திரகுமார் உள்ளிட்ட தேமுதிக நிர்வாகிகள், ஸ்ரீமுஷ்ணம் காவல் நிலையம்-த்தில் இந்த புகார் மனுவை வழங்கினர்.
அந்த மனுவில், கடந்த 22.01.2026 அன்று ‘ஒன் இந்தியா’ சமூக வலைதளப் பக்கத்தில் திருச்சி சூர்யா அளித்த பேட்டியில், தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் அவர்களின் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறியிருப்பது முற்றிலும் உண்மைக்கு புறம்பானதும், கட்சியின் நற்பெயருக்கும் தொண்டர்களின் உணர்வுகளுக்கும் களங்கம் விளைவிக்கும் வகையிலும் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இதுபோன்ற பொய்யான மற்றும் அவதூறான கருத்துகளை பரப்பிய திருச்சி சூர்யா மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அந்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வின்போது, தேமுதிக மாநில பொதுக்குழு உறுப்பினர் வி.எஸ். கிருஷ்ணராஜ், மரியம் பிரசாத், ஸ்ரீமுஷ்ணம் கிழக்கு ஒன்றிய செயலாளர் வேல். ரவிச்சந்திரன், வடக்கு ஒன்றிய செயலாளர் சதீஷ்குமார், ஸ்ரீமுஷ்ணம் பேரூர் கழக செயலாளர் வெற்றிவேல், அவைத் தலைவர் மலையப்பன், பொருளாளர் அர்ஜுனன், செயலாளர்கள் செந்தில்குமார், முருகவேல், சஞ்சய் காந்தி, பொறியாளர் அணி துணைச் செயலாளர் சிவக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த புகார் மனு தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொள்வதாக தெரிவித்துள்ளனர்.
.jpg)
No comments:
Post a Comment