சிதம்பரம், டிச.15:
பாரதிய ஜனதா கட்சி சார்பில் சிதம்பரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட BLA–2 மற்றும் பூத் கமிட்டி பயிலரங்கம் மற்றும் மாநாடு சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சிதம்பரம் சட்டமன்ற அமைப்பாளர் கேப்டன் பாலசுப்ரமணியன் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச் செயலாளர் அகத்தியர் வரவேற்புரை ஆற்றினார். சிதம்பரம் சட்டமன்ற பொறுப்பாளர் ஆவட்டி கணேசன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
க்ளோஸ்டர் இன்சார்ஜ் அருள் அமைப்பு ரீதியாக உரையாற்றினார். மாவட்ட பொதுச் செயலாளர் மற்றும் இணை அமைப்பாளர் ராகேஷ், SIR (Special Intensive Revision) தொடர்பான பணிகள் குறித்து விரிவாக விளக்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் A.D. ராஜேந்திரன் அரசியல் நிலைப்பாடுகள் குறித்து கருத்துரை வழங்கினார்.
மேலும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர் அருள், மாநில செயற்குழு உறுப்பினர் ஸ்ரீதரன், மாநில பொதுக்குழு உறுப்பினர் கோசலை ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். SIR பணிக்குழு உறுப்பினர் உமாபதி சிவம் நன்றியுரை ஆற்றினார்.
இம்மாநாட்டில் பரங்கிப்பேட்டை வடக்கு ஒன்றிய தலைவர் N.K. சுரேஷ், சிதம்பரம் நகர தலைவர் J. குமார், பரங்கிப்பேட்டை தெற்கு ஒன்றிய தலைவர் V.R. பகிரதன், குமராட்சி கிழக்கு ஒன்றிய தலைவர் சுபாஷ் சந்திரன், SIR பணிக்குழு உறுப்பினர்கள் சதீஷ்குமார், ராமதாஸ் உள்ளிட்ட மாநில, மாவட்ட, மண்டல நிர்வாகிகள், அணி–பிரிவு நிர்வாகிகள், கிளைத் தலைவர்கள், BLA–2 மற்றும் சக்தி கேந்திரா நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment