சிதம்பரம், டிச. 09 :
தமிழ்நாடு அணைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் பி.ஆர். பாண்டியன் கைது செய்யப்பட்டதை எதிர்த்து, சிதம்பரம் காந்தி சிலை அருகே இன்று விவசாயிகள் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கடலூர் மாவட்ட விவசாயிகள் பெருமளவில் கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட செயலாளர் மணிக்கொல்லை இராமச்சந்திரன், மாவட்ட தலைவர் அன்பழகன், விவசாய அமைப்பினரான சிவாயம் நாராயணசாமி, அறவாழி, கருப்பூர் ராஜாராமன், வேளங்கிப்பட்டு பன்னீர்செல்வம், பெரியகாரமேடு முத்துராமன், லோகநாதன், தீத்தாம்பாளையம் அசோக் குமார், சுரேஷ்குமார் உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
பாண்டியனை உடனடியாக விடுதலை செய்யக் கோரி, விவசாயிகள் கண்டன உரைகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கைது நடவடிக்கை சுதந்திரத்திற்கு எதிரானது எனவும், விவசாயிகளின் குரலை ஒடுக்க முடியாது எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.
© tamilagakural.com | செய்தி & விளம்பர தொடர்புக்கு: 9843663662

No comments:
Post a Comment