சிதம்பரத்தில் பிளிப்கார்ட்–இகார்ட் டெலிவரி ஊழியர்கள் வாடிக்கையாளரிடம் ஆபாச வார்த்தை: புகார் அளித்த வாடிக்கையாளர். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 26 November 2025

சிதம்பரத்தில் பிளிப்கார்ட்–இகார்ட் டெலிவரி ஊழியர்கள் வாடிக்கையாளரிடம் ஆபாச வார்த்தை: புகார் அளித்த வாடிக்கையாளர்.


சிதம்பரம், நவ.26:

சிதம்பரம் கஞ்சி தொட்டி–புவனகிரி புறவழிச்சாலையில் இயங்கும் பிளிப்கார்ட் மற்றும் இகார்ட் பார்சல் டெலிவரி நிறுவனத்தில், வாடிக்கையாளரிடம் டெலிவரி ஊழியர்கள் ஆபாச வார்த்தைகள் பயன்படுத்தியதாக புகார் எழுந்துள்ளது.

வாடிக்கையாளர்கள் பிளிப்கார்ட் இணையதளம் மூலம் உபயோகப் பொருட்கள், மருத்துவ பொருட்கள் உள்ளிட்டவற்றை ஆர்டர் செய்து வீட்டிற்கு டோர் டெலிவரி பெறுகின்றனர். ஆனால், சில டெலிவரி ஊழியர்கள் ஆடர்களை வீட்டிற்கு வழங்காமல் தானாகவே ‘கான்சல்’ செய்வது பல முறை நடந்துள்ளது.


இதனால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் நேரில் அலுவலகத்தில் சென்று கேள்வி எழுப்பியபோது, அவர்களிடம் “தரை குறைவாக வெளியே போ… நீ யார்?” என்று மோசமான, ஆபாச வார்த்தைகள் பயன்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த அவமதிப்பு குறித்து வாடிக்கையாளர் சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி, வாடிக்கையாளர்கள் பிளிப்கார்ட்டில் ஆர்டர் செய்ய பதற்றமான சூழ்நிலையில் உள்ளனர்.

இந்த வகை ஒழுங்கீனங்கள் மீண்டும் நடைபெறாமல் இருக்க பிளிப்கார்ட் நிறுவனம் உரிய நடவடிக்கை எடுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

No comments:

Post a Comment

*/