பரவனாற்றில் என்.எல்.சி கழிவு நீர் கலப்பை எதிர்த்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 28 November 2025

பரவனாற்றில் என்.எல்.சி கழிவு நீர் கலப்பை எதிர்த்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்.


கடலூர், நவம்பர் 28:

வடலூர் அருகே உள்ள பரவனாற்றில், என்.எல்.சி சுரங்கத்திலிருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர் கலப்பதால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதை கண்டித்து பசுமை தாயகம் அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி ஒன்றியத்தைச் சேர்ந்த விவசாயிகள் பலர் இதில் கலந்து கொண்டனர்.


பரவனாற்று பாலம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பசுமை தாயகம் அமைப்பின் தலைவர் சௌமியா அன்புமணி தலைமையில் விவசாயிகள் களமிறங்கினர். கழிவு நீர் கலப்பால் பயனளிக்கும் நீர் பாசனம் பாதிக்கப்படுவது மட்டுமல்லாமல் மண் மற்றும் பயிர்கள் மாசுபட்டு வருவதாக அவர்கள் குற்றம் சாட்டினர். மேலும், பரவனாற்றை தூர்வாரும் பணியை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்றும் கோரினர்.

ஆர்ப்பாட்டத்திற்கு முன்னர், வடலூர் கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் மருவாய் அருகே உள்ள பரவனாற்றை சௌமியா அன்புமணி கழக நிர்வாகிகளுடன் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது:

என்.எல்.சி சுரங்கத்திலிருந்து வெளியேற்றப்படும் நீர் பரவனாற்று வழியாக பெருமாள் ஏரிவரை பாசன வசதிக்காக அனுப்பப்படுகிறது. ஆனால் சாம்பல், நிலக்கரி துகள்கள் போன்றவை கலந்து வெளியேற்றப்படுவதால் நீர் மாசுபட்டு, விவசாய நிலங்களில் படிந்து வருகின்றன. இதனால் விவசாயம் பெரும் சேதமடைகிறது. இதைத் தடுத்து நிறுத்த தமிழக அரசு அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

 

No comments:

Post a Comment

*/