சிவகங்கை ஸ்ரீ ரமண விகாஸ் பள்ளியில் நடைபெற்ற தாத்தா பாட்டிகள் தின நிகழ்ச்சியில் பங்கேற்ற நகர் மன்ற தலைவர்.
உலக தாத்தா பாட்டிகள் தினத்தை முன்னிட்டு தங்கள் பிள்ளைகளின் பிள்ளைகளை வளர்ப்பதில் தனி ஆர்வம் காட்டும் தெய்வங்கள்தான் தாத்தா பாட்டிகள் என்று கூறி, அவர்களை போற்றும் விதமாக 2025ஆம் ஆண்டு 5வது உலக தாத்தா பாட்டி தினத்தை சிவகங்கை நகர் மன்ற தலைவரும் நகர் கழக செயலாளருமான சி. எம். துரை ஆனந்த் மற்றும் நகர் மன்ற உறுப்பினர் ஜெயகாந்தன் உள்ளிட்டோர் சிவகங்கை மாவட்டம் சிவகங்கையில் உள்ள ஸ்ரீ ரமண விகாஸ் பள்ளியில் நடைபெற்ற தாத்தா பாட்டிகள் தின நிகழ்ச்சியை தொடங்கி வைத்து, போட்டிகளில் கலந்து கொண்ட தாத்தா பாட்டிகளுக்கு சிறப்பு பரிசுகளை வழங்கினார்கள். இந்நிகழ்வில் பள்ளி நிர்வாகம், ஆசிரிய பெருமக்கள், பள்ளி மாணவ மாணவிகள், குழந்தைகள் மற்றும் வயது முதிர்ந்த தாத்தா பாட்டிகள் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment