சிதம்பரம் அருகே போலீசார் வாகனச் சோதனையில் காரில் இருந்த 7.5 கிலோ திமிங்கலம் எச்சம் Ambergris பறிமுதல் - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 11 September 2025

சிதம்பரம் அருகே போலீசார் வாகனச் சோதனையில் காரில் இருந்த 7.5 கிலோ திமிங்கலம் எச்சம் Ambergris பறிமுதல்

 


சிதம்பரம் அருகே போலீசார் வாகனச் சோதனையில் காரில் இருந்த 7.5 கிலோ திமிங்கலம் எச்சம் Ambergris பறிமுதல் செய்துள்ளனர்


இதன் மதிப்பு சுமார் ₹7.5 கோடி.  இதுகுறித்து கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில் சிதம்பரம் முத்தையா நகரை சேர்ந்த ராஜசேகர் என்பவர் சிதம்பரம் அருகே அம்மாபேட்டை கிராமத்தைச் சேர்ந்த பாபு என்பவரிடம் ரூ 3,5 லட்சத்திற்கு கார் ஒன்றை வாங்கியுள்ளார்.  அந்த காருக்கு ரூ 2.5 லட்சம் கொடுத்துள்ளார்


 மீதி ஒரு லட்சம் கேட்கும் போது ராஜசேகர் விலை உயர்ந்த திமிங்கலம் எச்சம் அவரிடம் இருப்பதாகவும் அதற்கு பதில் இதனை தருகிறேன்.  இது பல கோடி மதிப்பிலானது என கூறியுள்ளார்.


இதில் சந்தேகம் அடைந்த அவர் காவல்துறையினருக்கு அளித்த தகவலின் பேரில் ராஜசேகரை கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.  மொத்தம் 7.5 கிலோ திமிங்கலம் எச்சம் கைபற்றப்பட்டுள்ளது


இது ரூ 7.5 மதிப்புள்ளது என கூறப்படுகிறது.


மேலும் இந்த திமிங்கலம் எச்சம்

 உண்மையானதா? 

என்பது குறித்து ஆய்வுக்கு அனுப்பிய பிறகு தான் தெரிய வரும்.  கடலூர் மாவட்டத்தில் கஞ்சா லாட்டரி விற்பனையை தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது


லாட்டரி விற்பனைக்கு உடந்தையாக இருந்த சம்பவத்தில் 6 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில் இன்னும் யார் யார் தொடர்பில் உள்ளார்கள் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம் என்றார். இவருடன் காவல் ஆய்வாளர் அம்பேத்கர், உதவி ஆய்வாளர் மகேஷ் உள்ளிட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் உடன் இருந்தனர்


தமிழககுரல் கடலூர் மாவட்ட இணையதள செய்தி பிரிவு மாவட்ட செய்தியாளர் P ஜெகதீசன்

No comments:

Post a Comment

*/