தியாகி இமானுவேல் சேகரனாரின் 68வது நினைவு தினத்தை முன்னிட்டு துணை முதல்வர் நினைவஞ்சலி.
தியாகி இமானுவேல் சேகரனாரின் 68வது நினைவு தின குருபூஜை பரமக்குடியில் உள்ள அவருடைய நினைவிடத்தில் நடப்பு வருடம் 2025 செப்டம்பர் 11ஆம் தேதி நடைபெற்று வருகிறது. இக்குருபூஜைக்கு தமிழக துணை முதலமைச்சர் திரு உதயநிதி ஸ்டாலின் அவர்கள் வருகையை தொடர்ந்து, கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு கே. ஆர். பெரியகருப்பன் அவர்களின் தலைமையிலான திமுக கட்சி நிர்வாகிகள் திருப்புவனம் மின்வாரியம் அலுவலகம் முன்பாகவும், மானாமதுரை புதிய பேருந்து நிலையம் முன்பாகவும் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
தொடர்ந்து வழிநெடுக கட்சி நிர்வாகிகள் அளித்த வரவேற்பை ஏற்றுக்கொண்டு உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பரமக்குடியில் உள்ள இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்வில் வனத்துறை மற்றும் கதர் கிராம தொழில்கள் துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி ரவிக்குமார், மானாமதுரை நகர மன்ற உறுப்பினர் மாரியப்பன் கென்னடி, ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம், திமுக கட்சியை சேர்ந்த முன்னாள் மற்றும் இந்நாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாநில, மாவட்ட, ஒன்றிய, மாநகர, நகர, சட்டமன்ற, பேரூர், ஊராட்சி மற்றும் கிளைகளை சேர்ந்த முன்னாள் மற்றும் இந்நாள் நிர்வாகிகள் உறுப்பினர்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
மேலும் இமானுவேல் சேகரனாரின் குருபூஜைக்கு தமிழகத்தில் உள்ள திமுக, விசிக, கம்யூனிஸ்ட், காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள், அரசியல் தலைவர்கள், கட்சி நிர்வாகிகள், பேரவைகள், அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்கள் தங்கள் நினைவஞ்சலியையும், வீர வணக்கத்தையும் செலுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment