![]() |
மானாமதுரை நகராட்சி தெருக்களில் உள்ள ஜாதி பெயர்களை அகற்ற முடிவு, பொதுமக்கள் வரவேற்பு.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகராட்சியில் உள்ள தெருக்களின் ஜாதி பெயர்களை அகற்றிவிட்டு, மாற்றுப் பெயர்கள் வைக்க நகர் மன்றம் முடிவு செய்யப்பட்டதுள்ளது.
மானாமதுரை நகராட்சியில் மொத்தம் உள்ள 27 வார்டுகளில், 22 தெருக்கள், வீதிகள் மற்றும் சந்துகளுக்கு, "நல்லதம்பியாபிள்ளை தெரு, மறவர் தெரு, பறச்சேரி, வெள்ளாளர் தெரு, தெற்கு வெள்ளாளர் தெரு, நாவிதர் சந்து, கனக சபாபதியா பிள்ளை சந்து, விசுவாசம் பிள்ளை சந்து, முகமது கனி ராவுத்தர் தெரு" என ஜாதி பெயர்கள் இடம் பெற்றுள்ளன. இந்தப் பெயர்களை அகற்றி விட்டு, மாற்றுப்பெயர்களை வைக்க முடிவு செய்யப்பட்டது.
இதுகுறித்து மானாமதுரை நகர் மன்றத் தலைவர் எஸ். மாரியப்பன் கென்னடி கூறியதாவது, "தமிழக அரசு அறிவுறுத்தலின்படி, மானாமதுரை நகராட்சி தெருக்களில் உள்ள ஜாதி பெயர்களை அகற்றிவிட்டு, அதற்குப் பதில் மாற்றுப் பெயர்கள் வைக்க நகராட்சி முடிவு செய்துள்ளது. ஜாதி பெயர் அகற்றப்படும் தெருக்களுக்கான மாற்றுப் பெயர்களும் தேர்வு செய்யப்படவுள்ளது.
மானாமதுரை நகர் மன்றக் கூட்டத்தில் இது குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, மாற்றுப் பெயர்கள் வைக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என்றார்". தெருக்களின் ஜாதிப் பெயர்களை அகற்றும் முடிவுக்கு மானாமதுரை பகுதியில் உள்ள வார்டு பொதுமக்கள் வரவேற்புத் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment