மாவட்ட அளவிலான கராத்தே போட்டியில் பாபா மெட்ரிக் பள்ளி மாணவர்கள் சாதனை. பரிசும் பாராட்டும் வழங்கப்பட்டது.
கடலூர் மாவட்டம் வடலூரில் உள்ள எஸ் டி சீயோன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட அளவிலான கராத்தே போட்டி நடைபெற்றது. இதில் பரங்கிப்பேட்டை பாபா மெட்ரிக் பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர். பல்வேறு பிரிவுகளில் நடைபெற்ற கராத்தே போட்டியில் பரங்கிப்பேட்டை பாபா மெட்ரிக் பள்ளி மாணவர்கள்எஸ். ஸ்ரீ கார்த்திக்,எஸ். பவிஷ். பி.ஜீவிதன்,எஸ். கவியரசன்,பி.நிஷோக், கே. யஸ்வந்த், எம். முகமது ஜமீல் ஆகியோர் சண்டை பிரிவில் முதலிடமும்,எஸ். பவிஷ், எஸ். ஸ்ரீ கார்த்திக், எ. முகமது அகில் கட்டா பிரிவில் முதல் மற்றும் இரண்டாம் இடமும் பிடித்து வெற்றி பெற்றனர். கலர் பெல்ட் பிரிவில். யூ.சாய் சஸ்வின் எல்லோ பெல்ட் பெற்றார்.வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளி வளாகத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. இவ் விழாவிற்கு பள்ளியின் தாளாளர். மற்றும் நிர்வாக இயக்குனர் வைரமணி சண்முகம் தலைமை தாங்கினார்.பாபா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின்தலைமை ஆசிரியைரேவதி மற்றும்.பிரைமரி பள்ளி தலைமை ஆசிரியை கோமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வெற்றி பெற்ற மாணவர்களைப் பாராட்டி பரிசுகள் வழங்கி ஊக்கப்படுத்தினார். பள்ளியின் நிறுவனர் டாக்டர் சண்முகம், பெறாக் ஒகினாவா கோஜி ரியோகராத்தே பயிற்சி பள்ளி நிறுவனர் சென்சாய் வி. ரங்கநாதன்ஆகியோர் மாணவர்களை பாராட்டி ஊக்கப்படுத்தினார்கள். இவ்விழாவில் கராத்தே பொறுப்பு ஆசிரியை.அலமேலு. மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் கடலூர் மாவட்ட இணையதள செய்தி பிரிவு புவனகிரி செய்தியாளர் த.அம்பிகாபதி

No comments:
Post a Comment