சேத்தியாத்தோப்பு அருகே பூதங்குடியில் உங்களுடன் ஸ்டாலின் மக்கள் குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 19 September 2025

சேத்தியாத்தோப்பு அருகே பூதங்குடியில் உங்களுடன் ஸ்டாலின் மக்கள் குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது.


சேத்தியாத்தோப்பு அருகே பூதங்குடியில் உங்களுடன் ஸ்டாலின் மக்கள் குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது.


கடலூர் மாவட்டம் கீரப்பாளையம்  ஒன்றியத்துக்கு உட்பட்ட பூதங்குடி  ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் பொதுமக்கள் குறை தீர்க்கும் சிறப்பு முகாம்  தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. முகாமினை திமுக கீரப்பாளையம் மேற்கு ஒன்றிய செயலாளர் திருமூர்த்தி குத்துவிளக்கேற்றி  துவக்கி வைத்தார். தொடர்ந்து கோரிக்கை மனுக்களை பொதுமக்களிடமிருந்து பெற்று, கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கினார். முகாமிற்கு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பார்த்திபன், ஆனந்தன் ஆகியோர் தலைமை தாங்கினர்.  மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மாயகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.பூதங்குடி,வாழைக்கொல்லை,தெற்கு விருதாங்கநல்லூர், கூளப்பாடிஆகிய பகுதிகளுக்கு நடைபெற்ற முகாமில் வருவாய்த்துறை  மின்சாரத்துறை , வேளாண்துறை , காவல்துறை உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்று பொது மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றனர்.மேலும் இந்த முகாமில்  நடமாடும் மருத்துவம் சார்பில் மருத்துவ பயனாளிகளுக்கு மருந்து மாத்திரைகள்  வழங்கப்பட்டது.முகாமில் அரசுஊழியர்கள்,ஒரத்தூர் காவல் உதவி ஆய்வாளர் கிருஷ்ணராஜ் ஆகியோர் பங்கேற்றனர். இதில் திமுக நிர்வாகிகள் மாவட்ட பிரதிநிதி சுதா சம்பத்,ஒன்றிய அவைத் தலைவர் பரதூர் பாலு,மாவட்ட பிரதிநிதிகள் பாண்டியன், ஏ.கே.செல்வராஜ் கிளைச்செயலாளர் சம்பத், ஒன்றிய மகளிர் அணி அமைப்பாளர் அஞ்சம்மாள், மற்றும் ராணி,  ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர் சரவணக்குமார், ஒன்றிய இளைஞரணி நிர்வாகி  தமிழ்ச்செல்வன்,முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பரதூர் நடராஜன், உட்பட திமுக முக்கிய நிர்வாகிகள் பாலகுரு,தென்பாதி பன்னீர்செல்வம், செழியன், பாலரவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.முடிவில் பூதங்குடி ஊராட்சி செயலர் ரமேஷ், வாழைக் கொள்ளை ஊராட்சி செயலர் அன்புச்செல்வன், தெற்கு விருதாங்கநல்லூர் ஊராட்சி செயலர் சந்தோஷ் குமார் ஆகியோர் நன்றி கூறினர். முகாமில்பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.


தமிழக குரல் கடலூர் மாவட்ட இணையதள செய்தி பிரிவுக்காக புவனகிரி தாலுக்கா செய்தியாளர்    த  அம்பிகாபதி

No comments:

Post a Comment

*/