வடலூரில் பவர் சமூக இயக்கத்தின் 3ஆம் ஆண்டு தொடக்க விழா. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 14 September 2025

வடலூரில் பவர் சமூக இயக்கத்தின் 3ஆம் ஆண்டு தொடக்க விழா.


கடலூர் மாவட்டம் வடலூர் சுமதி மஹாலில், வடலூர் பவர் சமூக இயக்கத்தின் மூன்றாம் ஆண்டு தொடக்க விழா சிறப்பாக நடைபெற்றது. இயக்கத் தலைவர் தங்கமணி காந்தி தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், செயலாளர் வெங்கடேசன் வரவேற்புரை ஆற்றினார். தொடர்ந்து, வடலூர் பவர் மகளிர் அணி உறுப்பினர் வினோதினி பவர் உறுதிமொழியை வாசித்தார். அனைவரும் ஒன்றுபட்டு உறுதிமொழி ஏற்றனர். இந்நிகழ்ச்சியில் நிறுவனர் விஜயகுமாரன் மற்றும் பொதுச் செயலாளர் ராஜேஸ்வரன் முன்னிலை வகித்தனர்.


இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக வடலூர் அரசு கலைக்கல்லூரி தமிழ் துறை தலைவர் பேராசிரியர் ஆறுமுகம் கலந்து கொண்டு உரையாற்றினார். மேலும், வடலூர் நேத்ரா மருத்துவமனை மருத்துவர் பிரியதர்ஷன், பவர் சட்ட ஆலோசகர் வடலூர் வழக்கறிஞர் பிரபாகரன், நெய்வேலி செயலாளர் சௌந்தர்ராஜன், வடக்குத்து பொருளாளர் பாலு ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.


விழாவின் நிறைவில் இயக்கத்தின் பொருளாளர் கண்ணப்பன் நன்றியுரை ஆற்றினார். நிகழ்வில் பவர் சமூக சேவையின் செயல்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதுடன், புதிய உறுப்பினர் சேர்க்கை தொடர்பான கலந்தாய்வுகளும் நடைபெற்றன. மேலும், கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவுப் பரிசாக புத்தகங்கள் வழங்கப்பட்டன.


 - கடலூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தனுஷ் 

No comments:

Post a Comment

*/