விருத்தாச்சலத்தில் அரசு பேருந்து ஓட்டுநர் நடத்துனர் உள்பட நான்கு நபர்களை தாக்கிய ரவுடிகளை காவல்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தி பிடித்தனர்
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் நேற்று அதிகாலை பழமழை நாதர் நகரை சேர்ந்தமூன்று பேர் கொண்ட கும்பல் அந்த பகுதியில் புதிதாக வீடு கட்டிக் கொண்டிருக்கும் கார்த்திக்என்பவரை கட்டையாலும் கல்லாலும் தாக்கி விட்டுஅதனை ரீலீஸ் எடுத்திருக்கிறார்கள்
அதன் பின்பு அரசு மருத்துவமனை அருகில் உள்ள ஒரு கடையில்நின்றிருந்த ராஜேந்திரன் சுந்தரமூர்த்தி ஆகியோரை கல்லாலும் கட்டையாளும் தாக்கி விட்டு
மணலூர் செல்லும் பாதையில் உள்ள பாலத்தின் மீது நின்று அவ்வழியாக வந்த அரசு பேருந்து மறித்து பேருந்தில் ஏறி உள்ளனர் அப்போதுஅரசு பஸ் ஓட்டுநர் மூவரையும் மேலே ஏறி படியில் நிற்காமல் மேலே ஏறி வருமாறு கூறியுள்ளார்
இதனால் ஆத்திரமடைந்த போதையில் இருந்த கந்தவேல்,சிவா,பாலாஜி மூவரும் சேர்ந்து டிரைவரை பீர் பாட்டிலால் குத்தி இருக்கின்றனர்
இதுகுறித்து விருத்தாசலம் காவல்துறைக்கு தகவல் வந்ததின் பெயரில் இவர்கள் மூவரையும் பிடிப்பதற்கு விருத்தாசலம் கோட்ட உதவிகண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் ஆய்வாளர்கள் பார்த்தசாரதி சந்துரு ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்ட தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது இதில்
இவர்கள் மூவரும்விருத்தாசலம் அருகே கண்டியூன்குப்பம் முந்திரி காட்டில் பதுங்கி இருப்பதாக தகவலின் பேரில் அங்கு அவர்களை பிடிக்கச் சென்ற போது கந்தவேல் என்பவன் தன்னிடம் இருந்த கத்தியால் உங்களை வெற்றி விடுவேன் என்றும் விரட்டி உள்ளான்ஆய்வாளர் பார்த்தசாரதி அதுபோல் செய்யக்கூடாதே சரணடைந்து விடுங்கள் என கூறியுள்ளார் இதனை கேட்காத கந்தவேல் தன் கையில் இருந்த கத்தியால்காவலர்கள் வீரமணி,வேல்முருகன் இருவரையும் கத்தியால் வெட்டி உள்ளார் இதனை கண்ட உதவி ஆய்வாளர் சந்துரு தங்கள் உயிரை காப்பாற்றிக் கொள்வதற்காக துப்பாக்கியால் வலது காலில் சுட்டுள்லார்இதில் காயமடைந்து கீழே விழுந்த கந்தவேலைபிடிக்க காவலர்கள் முயன்ற போதுசிவா , என்பவன் அங்கிருந்துதப்பி ஓட நினைத்தபோதே பள்ளத்தில் விழுந்து கை கால் முறிவு ஏற்பட்டது பாலாஜி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டான்
பின்பு கந்தவேல் சிவா ஆகிய இருவரையும் விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்து அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டதுடன் காயமடைந்த காவலர்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டதுbஇதனை அறிந்த கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டு இதுகுறித்து மேலும் விசாரணை செய்து வருகின்றார்
இதில் கந்தவேல் என்பவன் மீது ஏழு அடிதடி வழக்கு இருப்பதாகவும் அதில் நான்கு விருத்தாசலம்காவல் நிலையத்திலும் மூன்று வழக்குகள் கோயம்பேடு காவல் நிலையத்திலும் உள்ளது எனவும் சிவா என்பவன் மீது இரண்டு வழக்குகளும் உள்ளதாகவும் எஸ். பி, கூறினார்
எந்தவித முன் விரோதமும் இன்றி மது போதையில் அதிகாலை முதல் ரீல்ஸ் எடுக்கும் ஆர்வத்தில்இதனை செய்தலாக குற்றவாளிகள் ஒப்புக்கொண்டதாகவும் எஸ்பி கூறினார்
மேலும் தப்பி ஓடிய பாலாஜி என்பவனை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாகவும் விரைவில் அவனும் பிடிபடுவான்என கூறினார்
மதுபோதையில் மூன்று இளைஞர்கள் விருத்தாசலம் நகரம் முழுவதும் எதிரில் வந்த அனைவரையும் அடித்து உதைத்து காயத்தை ஏற்படுத்தியதுவிருத்தாசலம் பகுதியில் பொதுமக்கள் இடையே அச்சத்தையும் பரபரப்பையும் பதற்றத்தையும் வேறுபடுத்தி உள்ளது
தமிழக குரல் கடலூர் மாவட்ட இணையதள செய்தி பிரிவு மாவட்ட செய்தியாளர் P ஜெகதீசன்

No comments:
Post a Comment