கடலூர், அக்டோபர் 2:
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி பேரூராட்சி 9 மற்றும் 11 முதல் 18 வரை உள்ள வார்டுகளைச் சேர்ந்த மக்களுக்கான “உங்களுடன் ஸ்டாலின்” முகாம் குறிஞ்சிப்பாடியில் நடைபெற்றது. பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் யூ. முகமது ரிஜ்வான் தலைமையில், குறிஞ்சிப்பாடி பேரூராட்சி செயல் அலுவலர் கோ. பாலமுருகன் முன்னிலையில் இந்த முகாம் நடைபெற்றது.
கடலூர் மாவட்ட கல்விக் குழுத் தலைவர் மற்றும் திமுக குறிஞ்சிப்பாடி ஒன்றியச் செயலாளர் பொறியாளர் சிவக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முகாமைத் தொடங்கி வைத்தார். முகாமில் அரசு சேவைகள் பெறுவதற்காக பொதுமக்கள் ஆர்வத்துடன் மனுக்கள் அளித்தனர்.
-
மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு, பூர்த்தி செய்யப்பட்ட மனுக்கள் பெறப்பட்டன.
-
மருத்துவ துறை சார்பில் இரத்த அழுத்தம் உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, மருந்துகள் வழங்கப்பட்டன.

No comments:
Post a Comment