கூடலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மனநலன் மற்றும் பாலின சமத்துவம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
கல்லூரி நிர்வாகம் மற்றும் கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் ஆகியன சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சி கல்லூரி கூட்ட அரங்கில் நடைபெற்றது.
கல்லூரி உதவி பேராசிரியர் மற்றும் கல்லூரி வேலைவாய்ப்பு அலுவலர் மகேஷ்வரன் வரவேற்றார்.
கல்லூரி துறை தலைவர் முனைவர் சுரேஷ்குமார், பேராசிரியர் முனைவர் பூங்கொடி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிய கல்லூரி முதல்வர் சுபாஷிணி பேசும்போது எதிர்கால சமுதாயம் வளம்பெற விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம் ஆகிறது. இளைய தலைமுறைக்கு பாலியல் மற்றும் உளவியல் விழிப்புணர்வு ஏற்படுத் வேண்டிய கட்டாயம் உள்ளது. பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைத்தால் மட்டுமே சமூக விழிப்புணர்வு பெறும். தற்போது அனைத்து துறைகளிலும் ஆண் பெண்கள் சமமாக இருக்கிறோம். திறன் என்பது இருபாலருக்கும் சமமாக உள்ளது. அதனை சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றார்.
சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தெப்பகாடு அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் ரோஷன் பேசும்போது. ஆண் பெண் இருபாலருக்கும் உடலளவில் பெரிய மாற்றம் இருப்பதில்லை. தற்போதைய நிலையில் பலமான சிந்தனைகள் செயல்களில் ஒன்றுபட்டு செயல்படுகின்றனர். போதை பழக்கம் உடலில் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்துவதால், தெளிவான சிந்தனை இருப்பது இல்லை. எதிர்கால வாழ்க்கையை சிதைத்து விடுகிறது. இளைஞர்கள் எதிர்கால லட்சியத்தை தீர்மானித்து செயலாற்ற வேண்டும் என்றார்.
கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் செயலாளர் சிவசுப்பிரமணியம் பேசும்போது கல்லூரி பருவம் என்பது இளைஞர்கள் எதிர்காலத்தை தீர்மானிக்கும் பருவம் இப்போது வாழ்க்கையில் வீணாக்கும் போது எதிர்காலம் இருண்டு விடும். காதல், பாலின கவர்ச்சி, சினிமா மற்றும் சமூக ஊடக தாக்கங்கள் தவறான வழிகளுக்கு அழைத்து செல்லும். அதனை தவிர்க்க வேண்டும். மன நலன் ஆரோக்கியமாக அமைய உணவு பழக்கத்தை சரிப்படுத்தி கொள்ளவும், தற்காப்பு கலைகள், உடற்பயிற்சி தியான பயிற்சிகள் உருவாக்கி கொள்ள வேண்டும். பெற்றோர்களை, பெரியவர்களை மதிக்கும் பழக்கம், சிறுவர்களுக்கு மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மையை வளர்த்து கொள்ளுதல் அவசியம் என்றார். வணிகவியல் துறை தலைவர் முனைவர் விஜயசாருமதி நன்றி கூறினார்
நிகழ்ச்சியில் கல்லூரி மாணவ மாணவியர் பலர் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் விஷ்ணுதாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:
Post a Comment