கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்எல்சி இந்தியா நிறுவனம் உள்ளது இங்கு சுரங்கம் 1, சுரங்கம் 1 விரிவாக்கம், சுரங்கம் 2 என மூன்று திறந்தவெளி சுரங்கங்கள் மூலம் பழுப்பு நிலக்கரி வெட்டி எடுக்கப்பட்டு மின் உ ற்பத்தி செய்யப்பட்டு வருகின்றனர் இதில் 8000 நிரந்தர தொழிலாளர்கள், பத்தாயிரம் ஒப்பந்த தொழிலாளர்களும் பணியாற்றி வருகின்றனர், இந்த நிலையில் என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்களுக்கு 20% போனஸ் வழங்க கோரியும், ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய கோரியும் பணி நிரந்தரம் செய்யும் வரை மாத ஊதியம் 50000 வழங்க கோரியும் உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி என்எல்சி ஜீவா ஒப்பந்த தொழிற்சங்கத்தினர் பல கட்ட போராட்டங்கள் நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் இன்று நெய்வேலி வட்டம் 8-ல் பெரியார் சிலை எதிரே என்எஸ்சி ஜீவா ஒப்பந்த தொழிற்சங்கத்தினர் இன்று வேலை நிறுத்த அறிவிப்பு கூட்டம் வைத்திருந்தனர் இந்த நிலையில் தங்களுக்கு 20% போனஸ் வழங்க கோரியும் ஒப்பந்த தொழிலாளர் பணி நிரந்தரம் செய்ய கோரியும் பணி நிரந்தரம் செய்யும் வரை மாதம் ஊதியம் 50000 வழங்க கோரியும் உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்ற 18ஆம் தேதி நள்ளிரவில் இருந்து ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக என்எல்சி ஜீவா ஒப்பந்த தொழிற்சங்கத்தின் சிறப்பு செயலாளர் அறிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment