மேலும் பல இடங்களில் சாலையில் மழை நீர் தேங்கி வழுக்கி விபத்து ஏற்படுத்தி வருகிறது. இதனை சரி செய்ய வேண்டும் என தொடர்ந்து கூறிவரும் இப்பகுதி கிராம மக்களும் விவசாயிகளும் தெரிவிக்கும் போது மாவட்ட நிர்வாகம் முதல் பல்வேறு அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் இது குறித்து நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவிக்கின்றனர். முக்கியமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த ஆற்றின் கரையோரம் வெள்ளத் தடுப்பு சுவர் அமைக்கின்ற போதுசாலை வெகுவாக சேதப்பட்டுள்ளது. இங்குள்ள கிராமத்திற்கு அவசர சிகிச்சைக்கான வாகனங்களோ அல்லது தீயணைப்பு வாகனமோ வருவதற்கான வாய்ப்புகள் இல்லை.
இரவு நேரங்களில் சாலைகளில் நடமாட முடியாத அளவில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. மேலும் இப்பகுதிகளில் உள்ள 1000 ஏக்கருக்கு மேல் விவசாயம் செய்து வரும் விவசாயிகளும் தங்களது உழவு வாகனங்கள் மற்றும் விவசாய விளைப் பொருட்களை ஏற்றி செல்லும் வாகனங்களை கொண்டு செல்ல முடியாமலும் அவதியுற்று வருகின்றனர். உரிய நிர்வாகம் இதில் தலையிட்டு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இவர்களின் கோரிக்கையாக உள்ளது.
No comments:
Post a Comment