கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தீயணைப்புத்துறை, வருவாய்த்துறை மற்றும் காவல் துறை சார்பாக சர்வதேச பேரிடர் மீட்பு மற்றும் பாதுகாப்பு ஒத்திகை செய்து காண்பிக்கப்பட்டது. கடலூர் மாவட்ட கல்வி குழு தலைவர் பொறியாளர் சிவகுமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குறிஞ்சிப்பாடி வட்டாட்சியர் அசோகன் முன்னிலை வகித்தார்.
குறிஞ்சிப்பாடி தீயணைப்பு நிலை அலுவலர் உத்திராபதி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் பேரிடர் காலங்களில் மக்கள் தங்களை எப்படி பாதுகாத்துக் கொள்ள வேண்டும் எனவும் அவசர காலங்களில் தன்னார்வலர்கள் எப்படி பொதுமக்களை ஆபத்திலிருந்து பாதுகாக்க வேண்டும் குறித்த செயல்முறை விளக்கத்தை செய்து காண்பித்தனர், நிகழ்ச்சியில் ஆதப்த மித்ரா பயிற்சி பெற்ற பயிற்றுநர்கள் வருவாய்த் துறையினர் காவல் துறையினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment