அக்கட்சியின் ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகளுடன் கட்சியின் வளர்ச்சி, மற்றும் அடுத்து வரும் தேர்தல்களை ஒற்றுமையுடன் எதிர்கொள்வது எப்படி என்பது பற்றிய இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக ஸ்ரீமுஷ்ணம் கிழக்கு ஒன்றிய அவைத் தலைவர் பரமானந்தம், ஸ்ரீமுஷ்ணம் கிழக்கு ஒன்றிய செயலாளர் ஜோதி பிரகாஷ் தலைமையில் நடந்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சிறப்பு விருந்தினர்களாக கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளரும் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினருமாகிய கே.ஏ பாண்டியன், கட்சியின் அமைப்புச் செயலாளரும், முன்னாள் காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினருமாகிய முருகுமாறன், அம்மா பேரவை செயலாளரும் முன்னாள் எம் ஆர் கே சர்க்கரை ஆலை தலைவருமாகிய கானூர் பாலசுந்தரம், அதிமுக முன்னாள் அமைச்சர் பா. மோகன்,அதிமுக முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம் ஆகியோர் கலந்து கொண்டு கட்சியின் நிர்வாகிகளுக்கு தங்கள் ஆலோசனைகளை வழங்கினர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஒன்றிய நகர கிளை நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
கடலூர் மாவட்டம்சேத்தியாத்தோப்பு அருகே உள்ளகுமாரக்குடி தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக கடலூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீமுஷ்ணம்கிழக்கு ஒன்றியம் சார்பாக செயல்வீரர்கள், வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
No comments:
Post a Comment