சேத்தியாத்தோப்பில் டாஸ்மாக் மாவட்ட மேலாளர் லஞ்ச ஒழிப்புத்துறையால் கைது செய்யப்பட்டார். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 24 October 2024

சேத்தியாத்தோப்பில் டாஸ்மாக் மாவட்ட மேலாளர் லஞ்ச ஒழிப்புத்துறையால் கைது செய்யப்பட்டார்.


கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அரசு மருத்துவமனை அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் சேத்தியாத்தோப்பு மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்த டாஸ்மாக் கடைகளில் வேலை செய்யும் 20க்கும் மேற்பட்ட பணியாளர்கள் கலந்து கொண்ட  ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதற்கு டாஸ்மாக் மாவட்ட மேலாளர் செந்தில்குமார் என்பவரும் வருகை தந்திருந்தார். அப்போது அவர் சேத்தியாத்தோப்பு பகுதிகளில் டாஸ்மாக் கடை விற்பனைப் பற்றிய  பல்வேறு ஆலோசனைகளை மண்டல மேலாளர் செந்தில்குமார் வழங்கினார். 

இந்நிலையில் இந்தக் கூட்டம் குறித்து கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் கடலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி சத்யராஜ் தலைமையிலான குழுவினர் ரகசியமாக வருகை தந்து கண்காணித்தனர். அப்போது டாஸ்மாக் ஆலோசனை கூட்டத்தை முடித்துவிட்டு   அவ்விடத்தை விட்டு கலைந்து சென்றனர். அப்போது மாவட்ட மேலாளர் செந்தில்குமார் லஞ்ச ஒழிப்புத்துறை காவல் ஆய்வாளர் திருவேங்கடம் என்பவருக்கு 25 ஆயிரம் ரூபாய் பணத்தை கொடுக்க முற்பட்டார். 

உடனடியாக அவரை வளைத்து பிடித்த லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் பிடிபட்ட மாவட்ட மேலாளர் செந்தில்குமார் மற்றும் உதவியாளர் ராதாகிருஷ்ணன் ஆகிய இருவரையும் சேத்தியாத்தோப்பு வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் வைத்து விசாரணை செய்தனர். விசாரணையின் முடிவில் மாவட்ட மேலாளர் செந்தில்குமார், உதவியாளர் ராதாகிருஷ்ணன் ஆகிய இருவரையும் கைது செய்து பணத்தை பறிமுதல் செய்து இருவரையும் தங்கள் வாகனத்தில் கடலூர் கொண்டு சென்றனர். 

No comments:

Post a Comment

*/