வடலூர் அருகே உள்ள மேட்டுக்குப்பம் சித்தி வளாகத்தில் நடைபெற்ற சன்மார்க்க கொடியேற்றம். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 24 October 2024

வடலூர் அருகே உள்ள மேட்டுக்குப்பம் சித்தி வளாகத்தில் நடைபெற்ற சன்மார்க்க கொடியேற்றம்.


வள்ளலார் ஜோதியாக மறைந்த மேட்டுக்குப்பம் சித்தி வளாகத்தில் நடைபெற்ற கொடியேற்றத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு, சன்மார்க்க கொடி பாடல் பாடப்பட்டு அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி என்ற படி பக்தர்கள் வழிபாடு. கடலூர் மாவட்டம் வடலூர் அருகே மேட்டுக்குப்பம் கிராமத்தில் அமைந்துள்ள சித்தி வளாகத்தில் சன்மார்க்க கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்றது.

மேட்டுக்குப்பம் சித்தி வளாகம் முழுவதும் பல்வேறு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு காலை சன்மார்க்கக் கூடிய ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது சன்மார்க்க அன்பர்கள் திருவருட்பா பாடல்களை பாடி மஞ்சள் வெள்ளை வர்ணம் பொருந்திய கொடியை கொடி மரத்தில் ஏற்றினர். மேலும் இன்றைய தினத்தில்தான் வள்ளலார் மேட்டுக்குப்பத்தில் சன்மார்க்க கொடியை ஏற்றி வைத்து மக்களுக்கு தேர்வு உபதேசம் செய்தார்.


எனவே இன்றைய தினத்தில் மேட்டுக்குப்பம் சித்தி வளாகத்தில் சன்மார்க்கக் கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது கொட்டும் மழைகளும் பக்தர்கள் குடை பிடித்தபடி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி என்ற படி வழிபாடு செய்தனர். 

No comments:

Post a Comment

*/